பதிவு செய்த நாள்
18
மே
2023
02:05
ஓசூர்; ஓசூர் அருகே, 60 ஆண்டுக்கு பின் நடந்த கோவில் திருவிழாவில், 400 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ஒன்னல்வாடி அருகே ஜொனபெண்டா கிராமத்தில், பழமையான கரகம்மா கோவில் உள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பில், பக்தர்களால் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த மார்ச், 30ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்தது. இதையடுத்து, 60 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோவில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், 400க்கும் மேற்பட்ட ஆடுகளை பக்தர்கள் பலி கொடுத்தனர். மேலும் ஊர் பண்டிகை என்ற பெயரில், உறவினர்கள், பக்தர்களுக்கு மட்டன், சிக்கன், பிரியாணி என, அசைவ விருந்து பரிமாறினர். இதனால், அக்கிராமமே விழாக்கோலம் பூண்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அசைவ விருந்து சாப்பிட்டனர். ஏற்பாடுகளை, ஒன்னல்வாடி பஞ்., தலைவர் மாதேஷ், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.