காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2023 10:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் தீர்த்தவாரி உற்சவம் அனந்த சரஸ் குளத்தில் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் வைகாசி பிரம்மோற்சவம்கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், நேற்று காலை, ஒன்பதாம் நாள் உற்சவத்தில் ஆள்மேல் பல்லக்கில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பின் மண்டபத்தில் இருந்து அனந்தசரஸ் குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மதியம் 12:15 மணிக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. குளத்தை சுற்றிலும் படியில் போலீசார் உள்பகுதியில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குளத்திற்குள் பொது மக்கள் இறங்காமல் தடுக்கும் வகையில் கயிறு கட்டப்பட்டிருந்தது. மேலும் குளத்தில் மூன்று காற்று படகுகள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்தன.