பதிவு செய்த நாள்
09
அக்
2012
04:10
பிறர் பாராட்டும் வகையில் வாழ்ந்து காட்டும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பூர்வ, புண்ணிய, சப்தம ஸ்தான அதிபதிகளான புதன், சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சனியுடன் அனுகூலக் குறைவாக உள்ளனர். இந்த மாதம் நற்பலன் வழங்குகிற கிரகமாக சுக்கிரன் மட்டுமே செயல்படுகிறார். நிதானித்து பேசுவதால் நன்மை ஏற்படும். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். பூர்வ சொத்தில் அளவான பணவரவு உண்டு. சொத்து ஆவணத்தின் பேரில் கடன் பெறுபவர்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண் டும். புத்திரர் கவனக்குறைவான செயல்களால் உடல்நலம் பாதிக்கப்படலாம். குடும்பச்செலவு அதிகரிப்பதால் மனதில் பல்வேறு குழப்பம் ஏற்படும். கடன் கிடைப்பதிலும் தாமதம் இருக்கும். தம்பதியர் வாழ்க்கை சூழ்நிலை உணர்ந்து குடும்பநலனை பாதுகாத்திடுவர்.தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை பின்வரும் மாதங்களில் நிறைவேற்றலாம். அளவான உற்பத்தி, சராசரி பணவரவு என்கிற நி லை இருக்கும். வியாபாரிகள் கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் பணத்தட்டுப்பாடு வராமல் தவிர்க்கலாம். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். குடும்ப பெண்கள் கணவரின் கஷ்ட சூழ்நிலைகளை உணர்ந்து உதவிகரமாக செயல்படுவர். சேமிப்பு பணம் குடும்ப செலவுக்கு பயன்படும். பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவான செயலால் நிர்வாகத்தின் கண்டிப்பை பெறுவர். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் தொழிலில் உருவாகிற குறுக்கீடு சரிசெய்வர். உற்பத்தி, விற்பனை சீராகும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் நன்மைபெற கூடுதல் பணம் செலவாகும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால் மட்டுமே சராசரி தேர்ச்சிவிகிதம் பெறலாம்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் மன உறுதியும் நன்மையும் கூடும்.
உஷார் நாள்: 10.11.12 அதிகாலை 1.29 முதல் 12.11.12 காலை 5.33 வரை
வெற்றி நாள்: அக்டோபர் 29, 30
நிறம்: வெள்ளை, மஞ்சள்,எண்: 2, 3.