பதிவு செய்த நாள்
09
அக்
2012
04:10
உழைப்பு உயர்வு தரும் என்ற நம்பிக்கை கொண்ட மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் புத ஆதித்ய யோக பலன் பெற்றுள்ளனர். அதிக நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், ராகு, செவ்வாய், குரு செயல்படுகின்றனர். மனதில் அன்பு, கருணை அதிகரிக்கும். உற்றமும் சுற்றமும் அன்புடன் நடந்து கொள்வர். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். சிலருக்கு தாய்வழி சொத்தில் பங்கு கிடைக்கும். புத்திரர்கள் திறமை வளர்த்து பேச்சில் வசீகரமும் படிப்பில் நல்ல தேர்ச்சியும் பெறுவர். உடல்நலம் சீராக இருக்கும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். தம்பதியர் குடும்பநலன் சிறக்க பொறுப்பான செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். தொழிலதிபர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்து உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தமும் தாராள பணவரவும் கிடைக்கும். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பும் விற்பனையில் உயர்வும் காண்பர். உபரி பணவரவு மூலதன தேவைக்கு பயன்படும். பணியாளர்கள் ஆர்வமுடன் பணிபுரிந்து பணி இலக்கை நிறைவேற்றுவர். கூடுதல் சலுகை கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை மனமுவந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பெண்கள் கணவரின் உடல்நலம் பாதுகாப்பதில் அக்கறை கொள்வர். ஆடை, ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் கூடுதல் திறனை வெளிப்படுத்தி அதிகாரிகளிடம் நன்மதிப்பு, சலுகைகள் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் சிறந்த முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் அனுபவசாலிகளின் ஆதரவு பெற்று புதிய திட்டங்களை செயல்படுத்துவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சியும், முன்னேற்றமும் காண்பர்.
பரிகாரம்: அபிராமி அன்னையை வழிபடுவதால் உடல்நலமும் பொருள்வளமும் சேரும்.
உஷார் நாள்: 7.11.12 இரவு 7.23 முதல் 9.11.12 நள்ளிரவு 1.29 வரை
வெற்றி நாள்: அக்டோபர் 27, 28
நிறம்: ரோஸ், ஆரஞ்ச், எண்: 1, 9