Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை 18 படியேறிய முதல் இருமுடி; ... சபரிமலையில் மண்டல காலம் துவங்கியது; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசனம் சபரிமலையில் மண்டல காலம் துவங்கியது; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஐயப்பனை தரிசிக்க.. சபரிமலைக்கு வனப்பகுதி வழியாக பயணத்தை துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஐயப்பனை தரிசிக்க.. சபரிமலைக்கு வனப்பகுதி வழியாக பயணத்தை துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 நவ
2023
05:11

மூணாறு: இடுக்கி மாவட்டம் சத்திரத்தில் இருந்து சபரிமலைக்கு வனப்பகுதி வழியாக முதல் நாளான இன்று 265 பக்தர்கள் நடந்து சென்றனர்.

சபரிமலையில் மண்டல கால பூஜை, மகரவிளக்கு சீசன் துவங்கியதால் இடுக்கி மாவட்டம் சத்திரத்தில் இருந்து பரம்பரை வனப்பாதை வழியாக முதல் நாளான இன்று 265 ஐயப்ப பக்தர்கள் நடந்து சென்றனர். புல்மேடு வழியாக, 12 கி.மீ தொலைவில் சன்னிதானம் உள்ளது. சத்திரத்தில் இருந்து தினமும் காலை 7:00 முதல் பகல் 2:00 மணி வரை சபரிமலை செல்ல அனுமதிக்கின்றனர். அதே போல் சபரிமலையில் இருந்து சத்திரம் திரும்ப காலை 9:00 முதல் 11:00 மணி வரை மட்டும் அனுமதியுண்டு.

வசதி குறைவு: சபரிமலை சீசன் துவங்கிய நிலையில் சத்திரம், புல்மேடு ஆகிய பகுதிகளில் பத்தர்களுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. அப்பகுதிகளில் ஓட்டல், கழிப்பறை ஆகியவற்றை நடத்த ஏலம் எடுப்பதற்கு ஆட்கள் வந்தும் ஏலத்தொகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால் ஒதுங்கி விட்டனர். வண்டிபெரியாறு ஊராட்சி திசைகளை குறிக்கும் போடுகள் வைப்பதற்கும், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கவும் நேற்று தான் டெண்டர் வழங்கினர்.

ஏற்பாடு: அதேசமயம் சுகாதாரம், வனம், போலீஸ் ஆகிய துறைகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சத்திரம், புல்மேடு ஆகிய பகுதிகளில் மூன்று மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டனர். வனத்துறையினர் சத்திரம், புல்மேடு வனப்பாதையை சீரமைத்து தற்காலிக விளக்குகள் பொறுத்தினர். தவிர பக்தர்கள் பயன் பெறும் வகையில் வனத்துறை சேவை மையம் தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை அதிகாரி ஜோதிஷ் தெரிவித்தார்.

பாதுகாப்பு: சத்திரம் வழியாக நடந்து செல்லும் பக்தர்களை போலீசார் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக குமுளி, புல்மேடு, வண்டிபெரியாறு, குட்டிக்கானம், பெருவந்தனம், உப்புத்தரா ஆகிய பகுதிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 44 எஸ்.ஐ.க்கள் உள்பட 273 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் தெரிவித்தார்.

போக்குவரத்து: கட்டப்பனை, குட்டிக்கானம் இடையே மலையோர நெடுஞ்சாலைக்கான ரோடு பணி நடப்பதால் கம்பம்மெட்டு, குட்டிக்கானம் வழியில் ஐய்யப்ப பக்தர்கள் செல்ல வாய்ப்பு இல்லை. அதனால் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் குமுளி வழியாக சபரிமலை செல்ல வேண்டும். திரும்பி வரும் பக்தர்கள் செழிமடை விலக்கில் இருந்து ஒன்றாம் மைல் வழியாக வண்டன்மேடு ஜங்ஷனுக்கு வந்து தமிழகம் செல்லலாம்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar