பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2023 10:12
சபரிமலை,: பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எருமேலியில் இருந்து கரிமலை, அழுதை, வலியான வட்டம் வழியாக பம்பை வரும் பெருவழி பாதையில் அதிக அளவில் பக்தர்கள் வர தொடங்கியுள்ளனர்.மகரவிளக்கு காலத்தில் இந்த வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பல்வேறு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நேரத்தை மேலும் அதிகரித்து வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி அழுதையிலிருந்து காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்பு மதியம் 2:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். முக்குழியில் இருந்து காலை 7:00 முதல் மாலை 4:30 வரை பக்தர்கள் செல்லலாம். இதற்கு முன்னர் இது 3:00 மணியாக இருந்தது. பெருவழி பாதையின் பல்வேறு இடங்களிலும் வனத்துறை ஊழியர்களின் கண்காணிப்பும், இயற்கை சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. வனத்துறை சார்பில் ஆங்காங்கே பக்தர்கள் தங்குவதற்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.