சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; 18 படியேற பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர் கூட்டம்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2023 11:12
சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைவதை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. முதல்முறையாக ஒரே நாளில், 1.63 லட்சம் பேர் மலை ஏறியுள்ளனர்.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு 10 முதல் 12 மணி நேரம் கியூவில் நிற்கின்றனர். அப்பாச்சி மேடு, மர கூட்டம், சரங்குத்தி ஆகிய இடங்களில் பக்தர்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அதன் பின்னரே இவர்கள் பெரிய நடை பந்தலுக்கு அனுப்பப்பட்டனர். இங்கும் ஒரு மணி நேரம் கியூவில் நின்ற பின்னர் தான் நெரிசலுக்கு மத்தியில் படி ஏறி தரிசனம் நடத்த முடிகிறது. படியேற்றுவதில் போலீசார் மீண்டும் தொய்வடைந்துள்ளதால் கியூ நீளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிறிஸ்மஸ் விடுமுறை நாள் என்பதால் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சன்னிதானம் போலீஸ் எஸ். பி. சுதர்சனன் தெரிவித்தார்.