திண்டுக்கல் சாவித்திரியின் மறக்க முடியாத சபரிமலை பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2023 05:12
சபரிமலை; சபரிமலையில் கூட்ட நெரிசலில் கூட்டம் பிரிந்து தனியாக தவித்த திண்டுக்கல் மூதாட்டி சாவித்திரியை நீண்ட முயற்சிகளுக்கு இடையில் சக பக்தர்களுடன் சேர்த்து திண்டுக்கல் சாவித்திரியின் மறக்க முடியாத சபரிமலை பயணம் போலீசாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிக்கிறது
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சாவித்திரி 65. கூலித்தொழியான இவர்சபரிமலைக்கு வர முடிவு செய்து தனது வருமானத்தில் மூவாயிரம் ரூபாய் சேர்த்து வைத்து ஒரு பக்தர் குழுவுடன் புறப்பட்டார். இதில் 2500 ரூபாய் போக்குவரத்துசெலவுக்காக கொடுத்துள்ளார். 500 ரூபாயுடன் ஆறு பேர் கொண்ட குழுவினருடன் சபரிமலை வந்த இவர் கூட்ட நெரிசலில் தங்களுடன் வந்தவர்களை விட்டு பிரிந்தார். பம்பையில் ஆங்காங்கே சுற்றி திரிந்த இவரை கேரள ஆயுதப்படை போலீஸ் இரண்டாம் பட்டாலியனில் போலீசார் நிதின், முகேஷ் ,ஸ்ரீஜித் ஆகியோர் அழைத்து விசாரித்தனர் அப்போதுதான் 500 ரூபாய் பணத்துடன் வந்ததும், தன்னுடன் வந்தவர்கள் தன்னை விட்டு விட்டு சென்று விட்டதையும் தெரிவித்துள்ளார். பக்கத்து வீட்டு அலைபேசி எண் உள்ளிட்ட எந்த விபரமும் சாவித்திரிக்கு தெரியவில்லை. பின்னர் கோவையில் தங்களுக்குத் தெரிந்த ஒரு எஸ்.ஐ. மூலம் சாவித்திரியின் முகவரியில் விசாரித்து அலைபேசி எண்களைப் பெற்று சாவித்திரியுடன் வந்தவர்களிடம் பேசிய போதுஅவர்கள் குருவாயூருக்கு சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.
அவர்களிடம் சாவித்திரியை அழைத்துக் கொண்டுதான் நீங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்று போலீசார் கடுமையாக கூறினார். இதை தொடர்ந்து போலீசாரே பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பம்பை கேரளா அரசு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சூர் பஸ் ஏற்றி அனுப்பினர். பஸ் திருச்சூரில் சேரும்போது உடன் வந்தவர்கள் குருவாயூர் தரிசனம் முடித்து திருச்சூர் பஸ் ஸ்டாண்டில் வந்து சாவித்திரியை அழைத்துச் செல்வார்கள். இந்த தகவல் திருச்சூர் போலீஸ் புற காவல் நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. செய்வது அறியாது திகைத்து நின்ற சாவித்திரி அந்த போலீசாரக்கு கண்கலங்க நன்றி தெரிவித்து புறப்பட்டார். போலீசாரின் இந்த விடாமுயற்சிக்கு பாராட்டுகள் குவிக்கிறது.