பதிவு செய்த நாள்
10
பிப்
2024
06:02
பூரட்டாதி 4 ம் பாதம்: ஞானம், தனம், அந்தஸ்திற்கு காரகனான குருபகவானின் அம்சத்தை பரிபூரணமாக கொண்டிருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றையும் கணித்து அதன்படி நடந்திடும் ஆற்றல் இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்துவதிலும் முதன்மையானவராக இருப்பீர்கள். இந்த மாதம் குருபகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து 6,8,10 ம் இடங்களைப் பார்ப்பதால் உடல் ரீதியான சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உங்கள் செல்வாக்கிற்கு ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய தொழில் தொடங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாடு செல்வதற்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி நிம்மதி உண்டாகும். விவசாயிகளுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவர்.
சந்திராஷ்டமம்: பிப். 28
அதிர்ஷ்ட நாள்: பிப். 21, மார்ச் 3,12
பரிகாரம் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தடைகள் பறந்தோடும்.
உத்திரட்டாதி: ஆயுள் மற்றும் கர்ம காரகனான சனிபகவான், தன புத்திர காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நிர்வாக ஆற்றல் நிறைந்திருக்கும். சுயமாக முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பீர்கள் என்றாலும் சில தடைகள் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இந்த மாதம் உங்கள் குடும்பாதிபதியும், பாக்கியாதிபதியுமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, சூரியன் உண்டாக்கும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். தெய்வ அனுகூலமும், பொருள் சேர்க்கையும் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். புதிய இடம் வாங்கும் முயற்சி, புதிய வீட்டில் குடியேறுதல் என்ற உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். சுக்கிர பகவானும் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை சிலருக்கு ஏற்படும். பெண்களுக்கு குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணையுடன் சில சங்கடங்கள் தோன்றி மறையும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நினைத்தவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர்.
சந்திராஷ்டமம்: பிப். 29
அதிர்ஷ்ட நாள்: பிப். 17,21,26, பிப்.3,8,12
பரிகாரம் பைரவரை வணங்கினால் மனபலம் அதிகரிக்கும்.
ரேவதி: கல்வி, அறிவு, வித்தை காரகனான புதன், ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்தவொரு செயலிலும் சாதுர்யமும் சாமர்த்தியமும் நிறைந்திருக்கும். உங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். அதில் வெற்றியும் அடைவீர்கள். இந்த மாதம் உங்கள் ராசிநாதன் இரண்டாம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் உண்டாகும். சூரிய பகவான் 12 ல் சஞ்சரிப்பதால் அரசு வழியில் சில நெருக்கடிகள் தோன்றும். வியாபாரிகள் வரவு செலவு விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். இடம் வாங்கி விற்கும் முயற்சி லாபம் தரும். விவசாயத்தில் இருந்த தடைகள் விலகும். மருத்துவம், கெமிக்கல், ஓட்டல், பெட்ரோலிய தொழில்களில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஒருபக்கம் நெருக்கடி ஏற்பட்டாலும் மறுபக்கம் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். ஜென்ம ஸ்தானத்தில் ராகு, 7 ல் கேது சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் எச்சரிக்கை தேவை. பேராசையால் தவறில் ஈடுபடுவோருக்கு அரசு வகையில் சங்கடங்கள் தோன்றும். பெண்களுக்கு யோகமாகமான மாதம். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் அக்கறை செலுத்துவதும் வாழ்க்கைத் துணைவரை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவதும் ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றுவதும் நன்மை தரும். சந்திராஷ்டமம்: மார்ச் 1
அதிர்ஷ்ட நாள்: பிப்.21,23, மார்ச் 3,5,12
பரிகாரம்: லட்சுமி நரசிம்மர் வழிபாடு நலம் தரும்.