பதிவு செய்த நாள்
11
மார்
2024
05:03
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் எதிரி தொல்லைகள் விலகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் தொழில் விருத்தியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பணியாளர்கள் நிலை உயரும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயத்தை ஏற்படுத்தும். உங்கள் ராசிநாதனின் சஞ்சாரமும், லாப ஸ்தானத்தில் உண்டாவதால் சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். பூமி சம்பந்தமாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு வழியில் நெருக்கடிகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் இந்த மாதத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். விவசாயிகள் விளைபொருளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவர். குரு பகவானின் பார்வைகளால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பணியில் இருப்பவர்கள் வேலையில் அக்கறை கொள்வதும் எச்சரிக்கையாக செயல் படுவதும் அவசியம்.
சந்திராஷ்டமம்: மார்ச் 30, 31
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16,18, 25, 27, ஏப். 7,9
பரிகாரம் சனிக்கிழமைகளில் நவக்கிரகத்தை வணங்கி வழிபட நன்மை உண்டாகும்.
பரணி; உங்கள் நட்சத்திரநாதன் மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலத்தை வழங்கிட இருக்கிறார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை வருமானத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். விரய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் வரவு செலவுகளில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற சட்ட சிக்கல்கள் சிலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு என்றாலும் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் எல்லாவற்றையும் சமாளிக்கும் நிலை உங்களுக்கு உண்டாகும். லாப ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரம் விருத்தியாகும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் லாபம் தோன்றும். பணம் பலவழிகளிலும் வர ஆரம்பிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். குருபகவானின் பார்வைகளால் தெய்வ அருள் பரிபூரணமாக கிட்டும். சிலர் ஆலய வழிபாட்டில் பங்கேற்பீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தகுதியான வரன் வரும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் உங்களின் மதிப்பு உயரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 31, ஏப்.1
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27, ஏப். 6, 9
பரிகாரம் குன்றில் இருக்கும் குமரனை வழிபட சங்கடம் குறையும்.
கார்த்திகை 1 ம் பாதம்; ஆன்ம காரகனான சூரியன், தைரிய, பராக்கிரம, சகோதர, ரத்த காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எல்லாவற்றையும் சமாளித்து வாழக் கூடிய சக்தி எப்போதும் இருக்கும். இந்த மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனமுடன் இருப்பது அவசியம். தேவையற்ற குழப்பங்கள் மனதிலும் செயலிலும் ஏற்படும் என்பதால் அனைத்திலும் நிதானம் வேண்டும். இருந்தாலும் உங்கள் ராசி அதிபதி மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் துணிச்சலாக செயல்பட்டு எதிர்பார்த்த வருமானத்தை அடைவீர்கள். சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் லாபம் அடையும். சிலருக்கு புதிய இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிலர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணிபுரியும் இடத்தில் வேலையில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். சுக்கிர பகவானின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 1
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 19, 27, 28, ஏப். 9,10
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.