விக்கிரமசிங்கபுரம்; பாபநாசம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இப்பணியில் கோயில் இன்ஸ்பெக்டர் கோமதி, நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் பிரதிநிதி சிவக்குமார், கோயில் கிளார்க் செந்தில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி வரலாற்று துறை தலைவர் மதுரைவீரன், பேராசிரியர் அனிதா மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.