நத்தம், நத்தம் மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஏப்.1 தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் கரந்த மலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு பின்னர் அன்று இரவு அம்மன்குளத்தில் இருந்து ஊர்வலமாக கரகம் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தோரணமரம் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள் அரண்மனை மாவிளக்கு, பால்குடம்,அக்கினிசட்டி .சந்தனகுடம் , முளைப்பாரி, எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து நேற்று இரவு கரகம் அம்மன் குளத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இன்று அம்மன் மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை மீனாட்சிபுரம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் .