கவுண்டம்பாளையம் கருமாரியம்மன் சக்தி பீடத்தில் திருக்கல்யாண விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 03:04
கோவை; கவுண்டம்பாளையம் கிரி நகர் ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் ஸ்ரீ மாசாணி அம்மன் கோவில் 28ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நேற்று 9ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் மூலவர் கருமாரியம்மன் விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.