காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற உகாதி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 04:04
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீ க்ரோதி நாம தெலுங்கு புத்தாண்டு உகாதி பண்டிகையொட்டி தேவஸ்தான பிரதான கோவிலில் பஞ்சாங்க ஷ்ரவணம் (படித்தல்) பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை மூலவர் (விநாயகருக்கு) சிறப்பு அபிஷேகம் செய்ய பட்டதோடு, சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் தேவஸ்தான ஆஸ்தான (ஜோதிடர்) சித்தாந்தி ஸ்ரீ சிவக்குமார் சர்மா எழுதிய காணிபாக்கம் தேவஸ்தானம் பஞ்சாங்கத்தை கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டப மேடையில் வெளியிடப்பட்டது. இதனை காணிப்பாக்கம் கிராம அர்ச்சகர் ஸ்ரீ மோகன் ராமலிங்கம், பஞ்சாங்க த்தைப் (ஷ்ரவணம்), படித்தார் . இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் வித்யாசாகர் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளர் கோதண்டபாணி, வாசு, கோவில் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் கோயில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.