Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரபஞ்ச சக்தி அளிக்கும் பிரமிட் ... கார்த்திகை விரதம்; கந்தனை வழிபட கவலைகள் நீங்கும்.. நல்லதே நடக்கும்! கார்த்திகை விரதம்; கந்தனை வழிபட ...
முதல் பக்கம் » துளிகள்
கோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்; வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்!
எழுத்தின் அளவு:
கோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்; வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்!

பதிவு செய்த நாள்

03 மே
2024
01:05

சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண லிங்கத்தை வைத்து வழிபடுவார்கள். நர்மதை ஆற்றில் தோன்றும் பாண லிங்கங்கள் உளுந்தளவு முதல் பெரும் பாறை அளவுக்கும் கிடைப்பதாகக் கூறுவர். பெருமாளுக்கு சாளக்ராம கல் எவ்வளவு சிறப்போ அத்தகைய சிறப்பு மிக்கது நர்மதா நதிக்கரையிலே சுயம்புவாக உருவாகும் பாண லிங்கம். நீரில் சுழற்சியின் காரணமாக நீள் உருண்டையாகத் திகழும் பாண லிங்கங்கள். நர்மதை நதிக்கரையில் சோணபுரத்தை ஆட்சி செய்து வந்தவன் வாணாசுரன், சிறந்த சிவபக்தன், அவன் கோட்டையைச் சிவபெருமானே காவல் செய்தார் என்றால், அவனது சிவபக்தி எத்தகையதாக இருந்திருக்கும்?!

திருஅஞ்சைக்களம் தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலைக்கு அழைத்துவர சிவபெருமான் அனுப்பியது இவனைத்தான். இதை, ‘வரமலி வாணன் மத்த ஆனையோடு வந்தெதிர் கொள்ள ’ எனும் நொடித்தான் மலை பதிகத்தின் வரிகளில் இருந்து அறியலாம். இந்த வாணாசுரன் தினமும் ஆயிரம் சிவலிங்கங்களை வைத்து பூஜிப்பான். பூஜை முடிந்ததும் லிங்கங்களை நர்மதை நதியில் விட்டுவிடுவான். அப்படி அவன் நர்மதையில்விட்ட லிங்கங்கள் அனந்த கோடி என்பார்கள். அவையே இப்போது பாண லிங்கங்களாக வெளிப்படுகின்றன என்பது நம்பிக்கை. நர்மதையில் கிடைக்கும் பாண லிங்கங்களைக் காசிக்குக் கொண்டுசென்று கங்கையில் நீராட்டிப் பூசித்து எடுத்துவருவது விசேஷம். பாண லிங்கங்களை வீட்டில் வைத்து பூஜிப்பது, பல கோடி நன்மைகளைப் பெற்றுத் தரும். அந்த வீட்டைத் துயரங்களும் தீய சக்திகளும் அண்டவே அண்டாது. பிரதோஷம், திங்கட்கிழமை, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற தினங்களில் பாண லிங்கத்துக்கு அபிஷேகங்கள் செய்து, வில்வம் சமர்ப்பித்து, சிவபுராணம் போன்ற துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால், நமது மனக்கிலேசங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

 
மேலும் துளிகள் »
temple news
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியான இன்று பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். கார்த்திகை சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வாராகி ... மேலும்
 
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar