பஞ்சந்தாங்கி பாலமுருகன் கோயிலில் பனையோலை பட்டையில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2024 04:05
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் பாலமுருகன் கோயில் உள்ளது. 10ம் ஆண்டு வைகாசி விசாகத்தை முன்னிட்டு கடந்த மே 13 அன்று காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது. மூலவருக்கு தொடர்ந்து பத்து நாட்களும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. மதியம் 2 மணிக்கு பக்தர்களுக்கு தொடர்ந்து பத்து நாட்களும் பனை ஓலை பட்டையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கோயில் விழா கமிட்டியாளர்கள் கூறியதாவது: பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனை ஓலையில் பட்டை செய்து அவற்றில் சாம்பார், ரசம், மோர் உள்ளிட்ட சைவ அன்னதானம் வழங்குகிறோம். இயற்கையான முறையில் பனை ஓலை பட்டையில் வழங்கப்படும் உணவுகளை பக்தர்கள் ஆர்வமுடன் விரும்பி சாப்பிடுகின்றனர். இயற்கையுடன் இணைந்த உணவுப் பொருள்களுக்கு எப்பொழுதும் தனி மவுசு நிலவுகிறது என்றனர். வருகிற மே 20 திங்கட்கிழமை அன்று பொது காவடி எடுத்து கிராமம் சுற்றி வலம் வருதலும், மே 22 வைகாசி விசாகம் புதன்கிழமை அன்று 7 மணி முதல் 12 மணிக்குள் பால்குடம், மயில் காவடி உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை பஞ்சந்தாங்கி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.