பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
11:06
மிருகசீரிடம் 3, 4 : வித்யா காரகனான புதன், ரத்தக் காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு வெற்றி பெறும் திறமை இருக்கும். பிறக்கும் ஆனி மாதம் உங்கள் நிலையில் முன்னேற்றங்களை உண்டாக்கும் மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரன் பொருளாதார நெருக்கடிகளை நீக்குவார். பொன், பொருள் சேர்க்கையை அதிகரிப்பார். எதிர்பார்த்த வரவை வழங்குவார். குடும்பத்திலும் நிம்மதியான நிலை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் படபடப்பு, டென்ஷன் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசு விவகாரங்கள் தள்ளிப் போகும் என்றாலும் லாப ஸ்தானத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். விவசாயிகளின் விருப்பங்கள் பூர்த்தியாகும். ரியல் எஸ்டேட், கெமிக்கல், பில்டர்ஸ், ஓட்டல், பிரிக்ஸ் தொழில் புரிவோருக்கு லாபம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் சாதகமாகும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வீர்கள். ஆரோக்கியம் சீராகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி ஏற்படாமல் போகும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 25
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27, ஜூலை 5, 9, 14
பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
திருவாதிரை: யோகக்காரகன் ராகு, கல்விக்காரகன் புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அறிவாற்றலும் அதிர்ஷ்டமும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் ஆனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்க, ராசிநாதன் ராசிக்குள்ளாகவே சஞ்சரிக்கிறார் என்பதால் எந்த ஒரு செயலையும் யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். மற்றவரால் சாதிக்க முடியாத காரியங்களையும் இப்போது உங்களால் சாதிக்க முடியும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இழுபறியாக இருந்த வரவு வந்து சேரும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சனிபகவான் வக்ரமடைவதால் செயல்களின் நிதானம் அவசியம். குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் சந்தோஷத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். செல்வாக்கு உயரும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 25, 26.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 22, 23, ஜூலை 4, 5, 13, 14.
பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட நன்மை அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: ஞானக்காரகன் குரு, வித்யா காரகன் புதன் அம்சத்தில் பிறந்து அறிவாற்றலால் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி புதிய பாதையைக் காட்டும். உங்கள் நட்சத்திரநாதன் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று பார்வைகளும் உங்களுக்கு யோகத்தை வழங்க இருக்கிறது. இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்களை விலக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு இப்போது கிடைக்கும். உடல்நிலை சீராகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். போட்டியாளர்கள் உங்களிடம் சரணடைவார்கள். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ரம் அடைந்தாலும் குருவின் பார்வைகளால் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் வருமானம் பல வகையிலும் வரும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 26, 27
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30, ஜூலை 3, 5, 12, 14
பரிகாரம்: குருபகவானை வியாழனன்று வழிபட வாழ்வு வளமாகும்.