Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : ஆனி ராசி பலன் சிம்மம் : ஆனி ராசி பலன் சிம்மம் : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
கடகம் : ஆனி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம் : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
12:06

புனர்பூசம் 4 ம் பாதம் : மனக்காரகனான சந்திரன், தனக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சமூகத்தில்  தனி அந்தஸ்தும், மரியாதையும், செல்வாக்கும் இருக்கும். பிறக்கும் ஆனி மாதத்தை உங்களுக்கு அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்லவேண்டும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். பணவரவை அதிகரிப்பார். பிள்ளைகளின் வழியில் நன்மைகளை அதிகரிப்பார். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் கனவை நனவாக்குவார். திருமண வயதினருக்கு தகுதியான வரனை அமைத்துத் தருவார். உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். இதுவரை உத்தியோகம், தொழிலில் இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் இரட்டிப்பாகும். இந்த நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களை பயமுறுத்தி வந்த சனி ஜூன் 19 முதல் வக்ரமடைவதால் உடல்நிலை சீராகும். ஆயுள் மீதான பயம் போகும். பெரிய அளவில் உங்களை பயமுறுத்தி வந்த நோய்களும், மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப்படும். குடும்பத்தில் தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 27
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 21, 29, 30, ஜூலை 2, 3, 11, 12
பரிகாரம்: அண்ணாமலையாரை தினமும் வழிபட வாழ்வு வளமாகும்.

பூசம் : ஆயுள்காரகனான  சனி, மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெளிவுடன், திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் எப்போதும் வெற்றி உண்டாகும். பிறக்கும் ஆனி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து அச்சத்தை உண்டாக்கிய சனி மாதத்தின் முதல் வாரத்தில் வக்ரம் அடைவதால் இதுவரை இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் ஆதாய நிலை உண்டாகும். மற்றவர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயர்ந்து தெளிவுடன் செயல்படுவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செயல்கள் யாவும் லாபமாகும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். குருவின் பார்வையும் 3ம் இடத்திற்கு உண்டாவதால் லாபம் பல மடங்காகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வரவேண்டிய பணம் வசூல் ஆகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 27, 28
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 20, 26, 29, ஜூலை 2, 8, 11
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சங்கடம் விலகும்.

ஆயில்யம்: கல்விக்காரகன் புதன், சிந்தனைக்காரகன் சந்திரன் அம்சத்தில் பிறந்து கல்வி கேள்விகளில்  முதலிடம் வகிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்கும் மாதம். மாதம் முழுவதும் உங்கள் லாபாதிபதியின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இதுவரையில் உங்கள் வாழ்வில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். அந்தஸ்து உயரும். மழலை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 28, 29
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, ஜூலை 2, 5, 11
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar