பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
11:06
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், ஆத்ம காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் சக்தி எப்போதும் இருக்கும். பிறக்கும் ஆனி மாதம் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் ராசிநாதன் தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகி பணவரவு அதிகரிக்கும். பொன்னும் பொருளும் சேரும். ஜீவனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஜூன் 19 முதல் வக்ரமடைவதால் தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குலதெய்வ அருள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தி அடையும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். அந்நியரின் உதவி அதிகரிக்கும். குருவின் பார்வைகளால் திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 26.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28 ஜூலை 1, 6, 10, 15
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.
ரோகிணி : களத்திரக்காரகனான சுக்கிரன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் உழைப்பால் வெற்றி பெறுபவராக இருப்பீர்கள். பிறக்கும் ஆனி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. இதுவரை உத்தியோகத்தில் நீங்கள் சந்தித்து வந்த நெருக்கடிகள் ஜூன் 19 முதல் விலகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் நிலை உயரும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவரின் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். லாப ராகுவால் வருவாய் உயரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கலைஞர்கள் முயற்சி நிறைவேறும். விவசாயிகள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 23, 24.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 20, 29, ஜூலை. 2, 6, 11, 15
பரிகாரம்: நடராஜரை வழிபட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் : அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், வீரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செயல்களில் வேகமும் சாதிப்பதில் திறமையும் இருக்கும். பிறக்கும் ஆனி மாதம் உங்களுக்கு யோகமான மாதம். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2ம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். லாப ஸ்தான ராகுவால் நீங்கள் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரம் முன்னேற்றமடையும். 7 ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகி லாபம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு நன்மை தரும். கமிஷன் ஏஜன்சி லாபம் தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் வக்ரம் அடைவதால் அரசு அலுவலர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். அலுவலக பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 24, 25
அதிர்ஷட நாள்: ஜூன் 15, 18, 27, ஜூலை 6, 9, 15.
பரிகாரம்: துர்கையை வணங்கினால் சங்கடம் விலகும்.