மத்திய அரசின் புனித யாத்திரை திட்டத்தில் 8 தமிழக கோவில்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2024 02:06
சென்னை; மத்திய அரசின் புனித யாத்திரை திட்டத்தில், தமிழகத்தின் 8 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இந்த நிதி ஆண்டுக்கான சுற்றுலா துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; மத்திய சுற்றுலா அமைச்சகம் தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்திரை தலங்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த புனித யாத்திரை, புத்துயிர் மற்றும் ஆன்மிகம், பாரம்பரியத்தை மேம்படுத்துதல் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள திருவாரூர் ஆலங்குடி குருபகவான் கோவில், தஞ்சாவூர் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில், திங்களூர் கைலாசநாதர் கோவில், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில், திருவிடைமருதூர் சூரியனார் கோவில், மயிலாடுதுறை கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில், திருவெண்காடு வேதாரண்யேஸ்வர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதசுவாமி கோவில் என 8 கோவில்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.