பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
12:07
கோவை; கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்துக்கு விஜயம் செய்த திருவாடுதுறை ஆதினம், திருக்கோவில் பணிகளை துவக்கிவைத்தார்.
ஒண்டிப்புதுார் அருகே காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடம் கோவிலில், அங்காள பரமேஸ்வரி அன்னை, முப்பெரும் தேவியர், விநாயகர், சிவன், முருகன், பாரத மாதா உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. தற்போது கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருவாடுதுறை ஆதினம், 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்துக்கு விஜயம் செய்தார். சுவாமி தரிசனம் செய்த அவர் ஆதிகுரு முதல்வரின் திருக்கோவில் பணியை, தொடங்கி வைத்தார். அருள் நிறைந்த தெய்வங்களுக்கு, அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்தார். தொடர்ந்து, காமாட்சிபுரி ஆதினம், இரண்டாம் குருமகா சன்னிதானம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளை ஆசிர்வதித்து, செங்கோல் வழங்கினார். நிறைவில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.