பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
மகம்: ஞானத்தோடு பிறந்த உங்களுக்கு பிறரை தலைமை தாங்கி வழிநடத்தும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். ஆடி மாதம் உங்களுக்கு யோகமான மாதம். உங்கள் நட்சத்திர நாதன் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து குடும்பத்தில் குழப்பம், வரவில் தடை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையை உண்டாக்கினாலும் குரு பகவானின் பார்வையால் மாறும். குருவின் பார்வைகள் 2,4,6 ம் இடங்களுக்கு உண்டாவதால் இதுவரையில் உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். 7 ம் இடத்தில் சஞ்சரித்து சங்கடங்களை வழங்கிய சனி பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சீராகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக செயல்படத் தொடங்குவீர். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு விலகும். வழக்குகள் சாதகமாகும். ஆரோக்யமாக செயல்படுவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கடந்த கால சங்கடம் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எந்தவொரு செயலிலும் ஆசைக்கு இடம் கொடுக்காமல் நேர்மையாக செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு விளைச்சலில் கவனம் தேவைப்படும்.
சந்திராஷ்டமம்:ஜூலை 25,26.
அதிர்ஷ்ட நாள்:ஜூலை 19,28. ஆக. 1,7,10,16.
பரிகாரம்: விநாயகரை வழிபட வளமுண்டாகும்.
பூரம்: ஒளிபோல் பிரகாசிக்கும் ஆற்றலுடன் பிறந்த உங்களுக்கு ஆடி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மைகளை வழங்கிட இருப்பதால் விருப்பம் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ராசிநாதன் விரய ஸ்தானத்திலும், குரு ஜீவன ஸ்தானத்திலும், ராகு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையாக செயல்படுவது நல்லது. இல்லையெனில் உங்கள் மீது நடவடிக்கைப் பாயலாம் என்றாலும் குருவின் பார்வையால் உங்களுக்குள் எச்சரிக்கை ஒலி ஒலிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பணவரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலக ஆரம்பிக்கும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சனி வக்ரம் அடைந்திருப்பதால் நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் கேந்திர பலம் பெறுவதால் உங்கள் செயலில் வேகம் இருக்கும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்:ஜூலை 26,27.
அதிர்ஷ்ட நாள்:ஜூலை 19,24,28. ஆக. 6,10,15.
பரிகாரம்: வெள்ளி அன்று மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்
உத்திரம் 1 ம் பாதம்: நினைத்ததை சாதிக்கும் சக்தி மிக்கவரான உங்களுக்கு, ஆடி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவு ஏற்படும். நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். நேரத்திற்கு உணவு, உறக்கம் என்பது இல்லாமல் போகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வேலையில் சங்கடம் ஏற்படும். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தினால் பொருளாதார நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். தடைப்பட்டிருந்த வேலை நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். குடும்ப, சுக, சத்ரு ஸ்தானங்களுக்கு குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு இம்மாதம் சுமாராக இருக்கும். ஒரு சிலர் தலைமையின் கண்டிப்பிற்கு ஆளாவீர். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொள்வீர். கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடி விலகும். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்:ஜூலை 27.
அதிர்ஷ்ட நாள்:ஜூலை 19, 28. ஆகஸ்டு 1,10.
பரிகாரம்: சூரிய பகவான் வழிபாட்டினால் நன்மை அதிகரிக்கும்.