பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
உத்திரம் 2,3,4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிடையும் உங்களுக்கு, ஆடி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம். உங்கள் நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இயங்காமல் நின்றிருந்த இயந்திரம் இயங்கும். தடைப்பட்ட வருமானம் வரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலாளர்க்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். குரு ராசியைப் பார்ப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்த விருப்பம் நிறைவேறும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பொன் பொருள் சேரும். செயல்களில் வெற்றி உண்டாகும். ராகுவால் நட்பு வட்டம் விரிவடையும். ஒரு சிலர் எதிர்பாலினரின் சூழ்ச்சி வலையில் சிக்க நேரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை. 28.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19,23. ஆக. 1,5,10,14.
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
அஸ்தம்: நினைத்ததை நடத்தி வெற்றிபெறும் உங்களுக்கு, ஆடி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கும் குரு, அவருடைய பார்வையால் தெய்வ அருள் உண்டாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் மாறுதல் ஏற்படும். செய்துவரும் தொழிலின் காரணமாகவும் வெளியூர் வாசம் ஏற்படும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குலதெய்வம், இஷ்ட தெய்வ அருளால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சூரியனால் உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். அரசு வழி முயற்சி நன்மை ஆதாயத்தை வழங்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். மேலோரின் ஆதரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். செய்து வரும் தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிகளுக்குள் இருந்த சங்கடம் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். சுக்கிரனின் சஞ்சார நிலைகளால் பொன் பொருள் சேரும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்.
சந்திராஷ்டமம்: ஜூலை. 28,29.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20,23. ஆக. 2,5,11,14.
பரிகாரம்: நடராஜரை வழிபட விருப்பம் நிறைவேறும்.
சித்திரை 1, 2 ம் பாதம்: தைரியம்,புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாக இருக்கும். கடந்த கால சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சமூகத்தில் தனி அந்தஸ்து உண்டாகும். குருவும் உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகம் உண்டாவதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். அரசு அலுவலர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பிள்ளைகள் முன்னேற்றம் அடைவர். உடல்நிலை சீராகும். உற்சாகமுடன் செயல்படுவீர். அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் சஞ்சார நிலையும் சாதகமாக இருப்பதால் பல வழியிலும் லாபம் கூடும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் மறையும். சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த செயல் நிறைவேறும். தடைப்பட்ட வருமானம் வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். கடன்தொல்லை நீங்கும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்க நீங்கள் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை. 29.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18,23,27. ஆக. 5,9,14.
பரிகாரம்: முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.