பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
சித்திரை 3, 4 ம் பாதம்: தைரிய வீரியத்துடன் திட்டங்கள் தீட்டி செயல்படுவதில் வல்லவராக இருக்கும் உங்கள் வாழ்வில் வளம்காண்பது இந்த ஆடி மாதம். லாபாதிபதி சூரியனால் தொழில், வியாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒருசிலருக்கு விரும்பிய இட மாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். குருவின் பார்வை விரய, தன, குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால் சுபச்செலவு அதிகரிக்கும். விற்க முடியாமல் இருந்த இடம் விற்பனையாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். நிம்மதியான உறக்கமும் சந்தோஷமும் ஏற்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணவரவில் ஏற்பட்ட தடை நீங்கும். தாய்வழி உறவுகளால் லாபம் அதிகரிக்கும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உடல்நிலையில் ஆரோக்கியம் ஏற்படும். போட்டியாளர் விலகிச் செல்வர். இழுபறி வழக்கு சாதகமாகும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் எச்சரிக்கை அவசியம். காவல் துறையில் பணிபுரிவர்களுக்கு மேலிடத்தால் நெருக்கடி ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 30.
அதிர்ஷ்ட நாள்: ஜுலை 18,24,27. ஆக. 6,9,15.
பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட நன்மை அதிகரிக்கும்
சுவாதி: நினைத்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு ஆடி மாதம் எப்படி இருக்கப் போகிறது தெரியுமா? யோகக்காரகனான உங்கள் நட்சத்திரநாதன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதும், லாபாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உங்களுக்கு சாதகம். இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி இனி இல்லாமல் போகும். ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை சந்தித்து வந்த உங்கள் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். நோய் மருத்துவத்திற்கு கட்டுப்படும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி முடிவிற்கு வரும். தடை நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். விற்பனை ஆகாமல் தேங்கியிருந்த பொருட்கள் நல்ல விலைக்கு செல்லும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சாதகமாக இல்லை என்பதால் செயல்களில் நிதானம் தேவை. தன புத்திரக்காரகனும் ரத்தக்காரகனும் மறைவு பெறுவதால் யோசிக்காமல் சிலவற்றில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாகும் நிலை உண்டாகும். குருவின் பார்வையால் வருமானம் பல வழியிலும் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். புதிய இடம், வீடு என ஒரு சிலருக்கு சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். உங்கள் முயற்சிக்கு ஏற்றவாறு முன்னேற்றம் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம்: ஜூலை 30,31.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22,24, ஆக. 4,6,13,15.
பரிகாரம் துர்கையை வழிபட்டால் துன்பம் தீரும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்: சகல அதிர்ஷ்டத்துடன் வாழும் உங்களுக்கு ஆடி மாதம் உங்கள் முயற்சிக்கேற்ற பலன்களை வழங்கிடும் மாதமாக இருக்கும். ராகு, சூரியன், குருவின் பார்வை என இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகளை வழங்கிட இருப்பதால் நீங்கள் நினைத்தது நடந்தேறும். அரசு வழி முயற்சி எளிதாக நடந்தேறும். சட்ட சிக்கல்கள் விலகும். அரசியல்வாதிகள் முயற்சி லாபத்தில் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வம்பு வழக்கு உங்களுக்கு சாதகமாகும். மேலைநாட்டு தொடர்பு லாபத்தை உண்டாக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். விற்பனை உயரும். எதிர்பார்த்த வருமானம் வரும் உங்கள் முதலீடு லாபத்தை ஏற்படுத்தும். திட்டமிட்டு செயல்பட்டு அதன் வழியாக லாபம் காண்பீர். செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். செலவிற்கேற்ற வருமானம் வரும். விருப்பம் நிறைவேறும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்கள் விருப்பம் பூர்த்தியாகும். அதற்காக எதிர்பார்த்த அனுமதியும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 31. ஆக. 1.
அதிர்ஷ்ட நாள்: ஜுலை 21,24,30. ஆக. 3,12,15.
பரிகாரம் : வியாழக்கிழமையில் குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.