பதிவு செய்த நாள்
01
ஆக
2024
11:08
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்மர் மலைக்கோவில். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் முதியவர்கள், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகள் மலையில் படியேறி செல்ல சிரமப்பட்டு வந்தனர். கடந்த மார்ச் 8ம் தேதி ரோப்கார் சேவை துவங்கப்பட்டது. நாளொன்றுக்கு, 1,000த்துக்கும் மேற்பட்டோர் இந்த சேவை வாயிலாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்கோவில் அடிவாரத்தில் ரோப் கார் வளாகத்தில் பக்தர்கள் காத்திருக்க வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரிசையில் காத்திருந்து, ரோப்காரில் பயணிக்கின்றனர். இந்த வளாகத்தின் நுழைவாயிலில், பாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால், பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோவில் நிர்வாகம், இந்த கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.