பதிவு செய்த நாள்
13
ஆக
2024
04:08
அவிட்டம் 3,4 ம் பாதம்: சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு எதையும் சாதிக்கும் திறன்பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிடும் மாதம். சூரியனால் உங்கள் வேலைகளில் வேகம் இருக்கும். எந்த ஒன்றிலும் நிதானம் என்பது இல்லாமல் போகும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். சுக்கிரன் களத்திர ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் உங்கள் செயல் மாறும். தேவையில்லாத பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினருடன் இணக்கம் உண்டாகும். குரு பகவானின் பார்வையால் உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்த நோய்கள் விலகும். நீங்கள் செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக் கிடைக்கும். 9 ம் பார்வை விரய ஸ்தானத்திற்கு ஏற்படுவதால் புதிய இடம் வாங்குவது, வாகனம் வாங்குவது, நகை வாங்குவது என்று செலவு அதிகரிக்கும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம் சஞ்சரிப்பதால் உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். புதன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். இடம், வீடு வாங்குவீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.
சந்திராஷ்டமம்: செப். 4.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,18,25,27. செப். 8,9.
பரிகாரம்: மாரியம்மனை வழிபட நன்மை உண்டாகும்.
சதயம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் கவனமுடன் செயல்பட வேண்டிய மாதம். ராகு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் ஏதாகிலும் ஒரு குழப்பம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உங்கள் வார்த்தைகளால் பிரச்னைகள் உருவாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. கேது அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வருவதால் தொடர்ந்து அல்லல்களுக்கு ஆளாகி வரும் உங்களுக்கு குருவின் பார்வை அவற்றிலிருந்து மாற்றத்தை உண்டாக்கும். உங்கள் திறமை வெளிப்படும். தொழில் ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். இந்த நிலையில் சூரியனால் வேலைகளில் டென்ஷன் அதிகரிக்கும். மனதில் ஏதாகிலும் ஒரு சிந்தனை ஏற்பட்டு உங்களைக் குழப்பமடைய வைக்கும். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் சுக்கிரனின் சஞ்சாரத்தால் எதிர்பாலினரால் குடும்பத்திற்குள் குழப்பம், வேலையில் கவனமின்மை என்ற நிலை உருவாகும். புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள், பத்திரப்பதிவு முடியும். நினைத்த வேலைகளை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். இந்த மாதத்தில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது மிக அவசியம்.
சந்திராஷ்டமம்: செப். 5.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,22,26,31. செப். 4,13.
பரிகாரம்: துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: வாழ்வில் எப்போதும் வெற்றிபெறும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமான மாதம். உங்கள் நட்சத்திர நாதனால் நட்புகளுடன் மோதல், தாய்வழி உறவுகளுடன் சங்கடம் என்ற நிலை உருவாகும் என்றாலும், குருவின் பார்வை அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களுக்கு உண்டாவதால் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிரி செய்த சதிகளில் இருந்து வெளியில் வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி குறையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொழில் வியாபாரம் லாபமடையும். பெண்கள் உடல்நிலையும் மன நிலையும் முன்னேற்றமடையும். வாழ்க்கைத் துணைக்கிருந்த பாதிப்பு விலகும். புதிய சொத்து, வாகனம் என்ற விருப்பம் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். செவ்வாயால் விவசாயிகளின் எதிர்பார்ப்பு இழுபறியாகும். யூனிபார்ம் துறையினருக்கு நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு விரும்பாத இடமாற்றமும் ஏற்படும். ஆசிரியர்களின் தீவிர கண்காணிப்பால் மாணவர்கள் நிலையில் முன்னேற்றம். ராகு, சுக்கிரன் சஞ்சரத்தினால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதுடன் எதிர்பாலினர் நட்பில் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அங்குள்ள நிலையை நன்றாக அறிந்து கொண்டு செல்வது அவசியம்.
சந்திராஷ்டமம்: செப். 6.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,21,26, 30. செப். 3,8,12.
பரிகாரம்: நவக்கிரக வழிபட நன்மை தரும்.