பதிவு செய்த நாள்
13
ஆக
2024
04:08
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: முன்னேற்றப் பாதையில் நடைபோடும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் லாபம் அடையும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உத்தியோகத்தில் இருப்போரின் கோரிக்கை நிறைவேறும். ராகுவும், கேதுவும் உங்கள் முயற்சிகளை வெற்றியடைய வைப்பார்கள். தடைப்பட்ட வேலை விறு விறுவென நடந்தேறும். வேலை, கல்வி, வியாபாரத்திற்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். பாக்ய, லாப ஸ்தானங்களுக்கும் ஜென்ம ராசிக்கும் குருவின் பார்வைகள் உண்டாவதால் தெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல் வாதிகளுக்கு பதவி, பொறுப்பு என்று நிலை உயரும். புதிய நட்பால் உங்கள் மனம் மகிழும். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும், உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 2.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,19,26,28. செப். 8,10.
பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
திருவோணம்: நீதி, நேர்மையே வாழ்க்கை என வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். ராகுவால் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தைரியமாக செயல்பட்டு மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடிப்பீர்கள். நீங்களே நினைத்துப்பார்க்க முடியாத இடத்திற்கு உங்கள் நிலை உயரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு அடிக்கடி விமானப் பயணம் உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீண்ட நாள் கனவை நனவாக்குவார். பட்டம் பதவி புகழ் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். பணம் பல வழிகளிலும் வரும். கோயில் வேண்டுதல் நிறைவேறும். தொழில், வியாபாரம் விருத்தியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாயால் உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்ப்புகளும் போட்டியும் நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். உங்களுக்கு புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்.
சந்திராஷ்டமம்: செப். 3.
அதிர்ஷ்ட நாள்: ஆக.17,20,26,29. செப். 2,8,11.
பரிகாரம்: பிரகதீஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்: நிதானமுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் குருவுடன் இணைந்து செயல்களில் லாபத்தை உண்டாக்குவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட போட்டியாளர்களை பலம் இழப்பார்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றியும் செயல்களில் லாபமும் உண்டாக்கும். அசாத்தியமான துணிச்சலுடன் செயல்பட்டு நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். குரு பகவானின் சஞ்சார நிலையும் பார்வைகளும் உங்கள் நிலை மேலும் உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். தடைகளை எல்லாம் தாண்டி தொழிலில் முன்னேற்றம் அடைவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்கள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை விலகும். ராகுவின் அருளால் நினைப்பதை நினைத்தபடி செய்து வெற்றியடைவீர். சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 4
அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,18,26,27. செப். 8,9.
பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.