Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனின் சாபத்தை போக்கிய ... சொர்க்கமே என்றாலும் மேலுகோட்டே போல வருமா? சொர்க்கமே என்றாலும் மேலுகோட்டே போல ...
முதல் பக்கம் » துளிகள்
மற்றொரு திருமலை ராபர்ட்சன்பேட்டை பெருமாள் கோவில்
எழுத்தின் அளவு:
மற்றொரு திருமலை ராபர்ட்சன்பேட்டை பெருமாள் கோவில்

பதிவு செய்த நாள்

02 செப்
2024
03:09

தெய்வபக்தி மிக்க நகரங்களில் தங்கவயலும் ஒன்று. இங்குள்ள வெங்கடேச பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு இன்னொரு திருமலையாக மாறியுள்ளது. இந்த புண்ணிய தலம், ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. சொர்ணகுப்பம் பகுதியில் தங்கச் சுரங்க ஒப்பந்ததாரர் பாஷ்யகாரலு நாயுடுவின் கனவில் திருமலை தெய்வம் திருவேங்கடமுடையான் தோன்றி, தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு கூறியுள்ளார். இதை வேத வாக்காக கருதி, தனக்கு சொந்தமான இடத்தில் சிறிய கோவிலை கட்டினார்.


நின்ற திருக்கோலம்; சென்னையில் இருந்து 1951 சுவாமி விக்ரஹங்களை வரவழைத்தார். கருப்பு கற்களில் உள்ள விக்ரஹம், நின்ற திருக்கோலத்தில் வரம் வழங்கும் வள்ளல் பெருமானாக காட்சி அளிக்கிறார். இடமும், வலமுமாக ஸ்ரீ தேவி பூதேவி விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இக்கோவிலை மைசூரு மகாராஜா, 1936 டிசம்பர் 10 ம் தேதி அரசுக்கு முறையாக எழுதி கொடுத்தார். கட்டட நிலம், தங்க ஆபரணங்கள், வைப்பு தொகையுடன் ஒப்படைக்கப்பட்டது.பழமை வாய்ந்த இக்கோவில், ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் அமைந்துள்ளது. இக்கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையிலும்; மாலையில் 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவிலில் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடும் கொடி மரம், விநாயகர் சன்னிதி, நவக்கிரஹ சன்னிதி, நாக தேவதைகள், கிருஷ்ணர் சன்னிதி, சந்தனம், நெல்லி, ஆலமரம், வேப்பமரம் ஆகியவைகளும் உள்ளன. கோவில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது.


பிரம்மோற்சவம்; தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் அதனை போக்கும் வளம் தரும் பெருமானாக, வரம் அளிக்கும் புண்ணிய தலமாக உள்ளது. இக்கோவிலில், 13 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. ஷிபிக வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், கல்யாண உற்சவம், கருட வாகன உற்சவம், கஜேந்திர மோக் ஷம், ரத உற்சவம், பார்வடோற்சவம், அம்ச வாகனம், புஷ்ப பல்லக்கு, முத்து பல்லக்கு, தங்கத்தேர் பிரசித்தி பெற்றவை. தங்கவயல் பக்தர்களை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டத்தினர் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தவர்களையும் பக்தியால் கட்டிப் போடுகிறது. இங்கு வரம் தரும் பெருமாளை வேண்டுவோருக்கு வளம் பெருகுவதாக பலரும் நம்பிக்கை கொண்டு உள்ளனர். இக்கோவிலில் சனிக்கிழமைகளில் எழும், கோவிந்தா கோஷம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்- நமது நிருபர் -.

 
மேலும் துளிகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். கார்த்திகை சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வாராகி ... மேலும்
 
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. ... மேலும்
 
temple news
அபிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாள் அன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar