ஒவ்வொரு திதியில் நாம் எந்த கணபதியை வழிபட வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2024 12:09
பால கணபதியை பிரதமை திதியில் வணங்கி வந்தால் குடும்பத்தில்இருக்கும் கஷ்டங்கள் நீங்குவதோடு,சீதள நோய் குணமாகும்.
துவிதியை திதியில் தருண கணபதியை வணங்குவது சிறப்பு. இந்த நாளில் தருண கணபதியை வணங்கி வரவலிப்பு நோய்குணமாவதோடு, நாம் செய்யும்ஒவ்வொரு செயலிலும் கணேசன் துணை நிற்பார்.
தொழில், உத்தியோகம் அல்லது சில காரணங்களுக்காக ஊர் விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வசிப்பவர்கள் திருதியை திதியில் பக்தி கணபதியை வணங்கி வர நன்மை ஏற்படும்.
ஒருவருக்கு திருமண வரன் அமைவதில் தடங்கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருப்பின் அவர்கள் வீர கணபதியை வணங்கி வந்தால் நிவர்த்தி ஆகும்.
பஞ்சமி திதியில் சக்தி கணபதியை வணங்கி அன்னதானம் செய்து வழிபட்டு வந்தால், வாகன விபத்து உள்ளிட்ட எந்த விபத்துகளும் அண்டாதவாறு காத்தருளுவார்.
பல பிறவிகளாக நம்மை தொடரும் பாவங்கள் அகல, நாம் செய்யக் கூடிய தொழில் மேம்பட சஷ்டி தோறும் த்விஜ கணபதியை வழிபடுங்கள்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் குறிப்பாகஇரும்பு தொழில் செய்பவர்கள்சப்தமி திதி அன்று சித்தி கணபதியை வணங்கி வாருங்கள்.
கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள், கல்வித் துறையில் இருப்பவர்கள் அஷ்டமி அன்று உச்சிஷ்ட கணபதியை வணங்குவதால் முன்னேற்றம் ஏற்படும். அதோடு கோயில் வேலை செய்பவர்களுக்கு இந்த வழிபாடு நல்ல பலனை அள்ளித்தரும்.
வட்டி கடை நடத்துபவர்களும், பொன், பொருள் விற்பனை செய்பவர்களும் நவமி திதியில் விக்ன கணபதியைவணங்கி வந்தால் அவர்களின் தொழில் மேம்படும்.