பதிவு செய்த நாள்
11
செப்
2024
11:09
மகாகவி பாரதி பிறந்த தினம்,1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதிலேயே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும், மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1921, செப்டம்பர் 11; நள்ளிரவு தாண்டி, காலை 1.30 மணி சுமாருக்கு பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தார்.
பக்திக்கும் நகரோதி என்று ஆதிசங்கரர் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்கிறார். பக்தி என்ன செய்யாது? என்பது இதன் பொருள். அதாவது பக்தியால் எல்லாம் முடியும் என்று அவர் ஆணித்தரமாக சொல்கிறார். பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் வேறில்லை என்று கூட சொல்வார்கள். அப்படியிருக்க விதி என்பதும் கடவுளுக்கு கட்டுப்பட்டதே என்பது தேசியக்கவிஞரின் கருத்து.
பாரதியாரின் வரிகள் .. தைரியம் தரும் பக்தி:
* தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே உலகமே வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பாராத விதத்தில் பயன்கள் கிடைக்கும்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும்.
* நல்ல விளக்கிருந்தாலும் பார்க்க கண் வேண்டும். அதேபோல் நாலுபேர் துணையிருந்தாலும் நல்ல முறையில் வாழ சுயபுத்தி வேண்டும்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிற உயிர்களைத் திருத்த அதிகாரம் பெறமாட்டான்.
* வெறும் சொல்லுக்கு மகிமையில்லை. அச்சொல் உள்ளத் துணிவை உணர்த்துமாயின் அதற்கு மகிமையுண்டு.
* உண்மையான பக்தி இருந்தால் மனதைரியம் கிடைக்கும், மனதைரியம் இருந்தால் தெய்வ பக்தி ஏற்படும். அத்துடன், இந்த பிறவியிலேயே தெய்வநிலை பெறலாம்.
* கடவுளிடமும் அவருடைய படைப்பாகிய அனைத்து ஜீவன்களிடமும் என்றும் மாறாத அன்பு செலுத்துவதே பக்தி. அதுவே முடிவான சாதனமாகும்.