பதிவு செய்த நாள்
14
செப்
2024
03:09
மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்; தெளிந்த ஞானமும் வாழ்வியல் குறித்த புரிதலும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிநாதன் நன்மைகளை உண்டாக்குவார். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். பெரியோரின் ஆதரவு இக்காலத்தில் உங்களை வழிநடத்தும். தெய்வத் தலங்களுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் பாக்கியமும் ஒரு சிலருக்கு ஏற்படும். புதிய வீடு கட்டும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகளை எல்லாம் நடத்தி முடிப்பீர். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் ஆசை அதிகரிக்கும். அதனால் சில சங்கடங்களும் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஈடுபடும் வேலைகளில் எதிர்மறையான பலன் ஏற்படக்கூடும். சட்ட ரீதியான சிக்கல்களையும் சந்திக்க வேண்டி வரும். கவனமாக செயல்படுவது நல்லது. திடீர் அதிர்ஷ்டமும் எதிர்பாராத வரவுகளும் மாணவர்கள் படிப்பில் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். விவசாயிகள் அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: அக். 4.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 30. அக். 3, 12.
பரிகாரம் ஆலங்குடி குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரட்டாதி: நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். கேந்திர ஸ்தானங்களில் ராகு, செவ்வாய், சூரியன், கேது சஞ்சரிக்கும் நிலையில் ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சுக்கிரனால் குழப்பம் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். தவறான நண்பர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வர். குரு பகவானின் பார்வை திருமணத்திற்கு காத்திருந்தவர்களை மணமாலை சூட வைக்கும். நட்பு வட்டத்தில் இருந்த பிரச்னை விலகும். விலகிச்சென்றவர் மீண்டும் உங்களைத் தேடிவருவர். கூட்டுத்தொழில் லாபத்தில் செல்லும். பெரியோரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அதனால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். புதன் பகவான் அருளால் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். இருப்பினும், ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் ஒவ்வொரு முயற்சியிலும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலைகள் இழுபறியில் முடியும். அதனால் உங்களால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்வது நல்லது. விவசாயிகளுக்கு முன்னேற்றமான மாதமாகும்.
சந்திராஷ்டமம்:
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26, 30. அக். 3, 8, 12, 17.
பரிகாரம்: முன்னோர் வழிபாட்டால் சங்கடம் விலகும். நன்மைகள் உண்டாகும்.
ரேவதி: சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் உழைப்பால் வெற்றி அடையும் மாதம். அக் 10 முதல் உங்கள் நட்சத்திரநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டிருந்த வேலைகளை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒப்பந்தம் வரும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றி அடையும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய நிலை இக்காலத்தில் உங்களுக்கு ஏற்படும். குரு பகவானின் பார்வைகளால் உங்கள் வாழ்க்கை வளம் அடையும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர். கையில் எடுக்கும் வேலைகளில் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். பழைய கடன்களை எல்லாம் அடைத்து நிம்மதி அடையக்கூடிய நிலை ஏற்படும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். தாய்வழி உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கின்ற அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 5, 6.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 23, 30. அக். 3, 12, 14.
பரிகாரம்: திருக்கோட்டியூர் சவுமிய நாராயணரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.