பதிவு செய்த நாள்
15
அக்
2024
04:10
மேஷம்: அசுவினி.. முயற்சியில் உறுதியாக இருந்து வெற்றி பெறக்கூடிய ஆற்றல் பெற்ற உங்களுக்கு, இந்த மாதத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்குகள் சாதகமாகும். அரசு பணியாளர்கள் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். குரு பகவனால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் வருமானமும் கூடும். குடும்பத்தில் சுபிட்சமான பலன் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு சொத்து சேரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். கோயில் வேண்டுதல் நிறைவேறும். பெரியோரின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். ராசிநாதன் அக். 24 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும், உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். தாயாரின் உடல் நிலையில் அக்கறை தேவை. வருமானம் ஒரு பக்கம் அதிகரிக்கும் என்றாலும் மறுபுறம் சனிபகவானின் பார்வையால் உங்கள் நிலையில் சங்கடம் உண்டாகும். ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இருக்க முடியாமல் போகும். மறைமுக எதிரிகளால் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். ஒவ்வொரு செயலில் கவனமுடன் ஈடுபடுவதும் மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவதும் நன்மை பயக்கும்.
சந்திராஷ்டமம்: நவ 2, 3
அதிர்ஷ்ட நாள்: அக் 18, 25, 27. நவ 7,9,
பரிகாரம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும். நன்மை அதிகரிக்கும்.
பரணி : எதையும் எதிர்கொண்டு வெற்றி அடையக்கூடிய ஆற்றலுடைய உங்களுக்கு ஐப்பசி மாதம் முழுவதும் யோகமான பலன் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகி கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். சூரியனால் சில மாற்றங்களை சந்திக்க வேண்டி வரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரம் செய்பவர் தங்கள் நிறுவனத்தை விரிவு செய்வீர். பொதுவாக வருமானத்திற்காக உழைப்பீர். அதன் காரணமாக உடல் நிலையிலும் சங்கடம் ஏற்படும். தாய்வழி உறவுகளால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் கவனம் தேவை. பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் எச்சரிக்கை. புதன் பகவான் ராசிநாதனின் வீட்டில் சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் கனவு நனவாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி நிறைவேறும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சூழ்நிலை சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: நவ 3, 4
அதிர்ஷ்ட நாள்: அக் 18, 24, 27. நவ 6, 9, 15.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
கார்த்திகை 1 ம் பாதம்: வாழ்வின் முன்னற்றத்தை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நட்சத்திர நாதன் ராசியைப் பார்ப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பும் அதன் காரணமாக உழைப்பும் அதிகரிக்கும். வியாபாரிகள் நிலையில் மாற்றம் ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடையும். லாப சனியால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். பணியாளர் ஒத்துழைப்பாக இருப்பர். அக். 26 முதல் புதன் பகவானால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர். தடைபட்டிருந்த வேலை எளிதாக நடந்தேறும். சனி பகவானின் பார்வை, ராசி நாதனாலும் உடல் நிலையில் கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது. சிறு சிறு தொந்தரவு ஏற்பட்டு மருத்துவச் செலவு ஏற்படும். விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வரவு செலவில் கவனமாக இருப்பதுடன், சட்டத்திற்கு விரோதமான வருமானத்தை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்பதும், கோயில் வழிபாடு திருப்தி தரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ 5.
அதிர்ஷ்ட நாள்: அக் 18,19,27,28. நவ 1,9,10
பரிகாரம்: குலத்தெய்வத்தை வழிபட வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.