பதிவு செய்த நாள்
15
அக்
2024
05:10
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்.. பிறருக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு, இம்மாதம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் ஆற்றலை வழங்கும் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் தடைபட்ட வேலைகள் எல்லாம் எளிதாக நடக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். வியாபாரப் போட்டி விலகும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.செல்வாக்கு உயரும். வழக்கு என சங்கடப்பட்டவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். உழைப்பாளிகளின் நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை விலக ஆரம்பிக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் அதிகரிக்கும். லாப ஸ்தான ராகுவால் வருமானம் அதிகரிக்கும். மேலை நாட்டு முயற்சி சாதகமாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ராசி நாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நட்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இக்காலத்தில் உங்களைப் பாதுகாக்கும். உங்கள் வேலைகளில் மட்டும் இக்காலத்தில் கவனம் செலுத்துவதும் நன்மையை வழங்கும். செவ்வாய் பகவானால் எடுக்கிற முயற்சி எல்லாம் வெற்றி அடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கையில் புதிய பாதைத் தெரியும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். வரவு அதிகரிக்கும். கடன் கேட்ட இடத்தில் பணம் வரும். நவ 4 முதல் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் செய்துவரும் வேலையில் அக்கறை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய தொழில் அமையும்.
சந்திராஷ்டமம்: நவ 5.
அதிர்ஷ்ட நாள்: அக் 19, 24, 28. நவ 1, 6, 10, 15.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
ரோகிணி : திட்டமிட்டு வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். நட்சத்திரநாதனால் மேற்கொள்ளும் முயற்சி யாவும் வெற்றியாகும். இதுவரை தடைபட்ட வேலை முடிவிற்கு வரும். உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்ட காலமாக விற்க முடியாமல் இருந்த இடத்தை விற்கவும், வாங்க நினைத்த இடத்தை வாங்கவும் முடியும். வருமானம் அதிகரிக்கும். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதுவரை இருந்த அலைச்சல் குறையும், விலகி இருந்தவர்களுக்கு இனி குடும்பத்துடன் இருக்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும். நெருக்கடி நீங்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பொருளாதாரம் விரைவாக முன்னேற்றம் அடையும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். தினப்பணியாளர்கள், ஊழியர்களுக்கு உயர்வு உண்டாகும். இதுவரை இருந்த சங்கடம் விலகும். நெருக்கடி மாறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். சுய தொழில் செய்து வருவோருக்கும், கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும்.
சந்திராஷ்டமம்: நவ 6
அதிர்ஷ்ட நாள்: அக் 20, 24, 29. நவ 2, 11, 15.
பரிகாரம்: நடராஜர் வழிபட்டால் வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் : நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். இழுபறியாக இருந்த வேலை எல்லாம் நடக்கும். புதிய முயற்சி லாபமாகும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சூரியன் உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை குறைப்பார். வீட்டில் நிலவிய குழப்பமான சூழலுக்கு ஒரு மாற்றத்தை உண்டாக்குவார். உங்கள் திறமை வெளிப்படும் காலம். வழக்கு சாதகமாகும். தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். செய்து வரும் தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். இருந்தாலும், அனைத்தையும் சமாளித்திடும் சக்தி ஏற்படும். அதிகாரி உங்களுக்கு உதவியாக இருப்பார். பதவி உயர்வை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். தினப்பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் குறையும். நெருக்கடி தானாக நீங்கும் காலம் இது. சகோதரர்கள் வழியில் ஒற்றுமை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ 7.
அதிர்ஷ்ட நாள்: அக் 18, 24, 27. நவ 6, 9, 15.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.