பதிவு செய்த நாள்
15
அக்
2024
05:10
மிதுனம்; மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்..மனதில் துணிவும் செயலில் நிதானமும் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் வக்ரமடைந்திருப்பதால் செலவு கட்டுப்படும். அலைச்சல் குறையும். செயல்களில் ஏற்பட்ட போராட்ட நிலை மாறும். நவ 4 முதல் உங்கள் ராசிக்குரிய பாக்யாதிபதி சனி வக்கிர நிவர்த்தி அடைந்து ஆட்சியாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். தெய்வ அனுகூலமும் பெரியோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும். இதுவரை ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அக் 25 முதல் உங்கள் ராசிநாதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பூமி சம்பந்தமான விவகாரம் முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். வரவு பல வகையிலும் அதிகரிக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். தொழிலாளர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதித்திடும் நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துவதால் நினைத்த இலக்கை அடைய முடியும்.
சந்திராஷ்டமம்: நவ 7.
அதிர்ஷ்ட நாள்: அக் 18, 23, 27. நவ 5, 9, 14.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் தீரும்.
திருவாதிரை: எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்பட்டு யோகத்தை அடைந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் கேந்திரமாக சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து லாபத்தை உண்டாக்குவர். அக் 25 முதல் உங்கள் ராசிநாதன் எண்ணங்களை பூர்த்தியாக்குவார். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்ப்புகள் இல்லாத நிலையை உருவாக்குவார். கையில் எடுக்கின்ற முயற்சிகளில் எல்லாம் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். புதிய ஒப்பந்தம் உங்கள் கைக்கு வரும். வெளிநாட்டு தொடர்புடைய முயற்சி பலிக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செலவு கட்டுப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். நண்பர்களால் லாபம் உண்டாகும். உறவுகள் உங்களுக்கு உதவியாக இருப்பர். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். தினப் பணியாளர்கள் நிலையில் உயர்வு தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ 8
அதிர்ஷ்ட நாள்: அக் 22, 23, 31. நவ 4, 5, 13, 14
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடம் நீங்கும்
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: பிறரை அனுசரித்துச் செல்லும் குணமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த நிலையில் வக்ரம் அடைந்திருப்பது உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். பொருளாதார ரீதியாக இருந்த சங்கடம் படிப்படியாக குறையும். நவ 4 முதல் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டு வந்த முயற்சி வெற்றியாகும். நினைப்பதை எல்லாம் நடத்திக் கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். தைரியமாக செயல்பட்டு உங்கள் பணியில் லாபம் காண்பீர். உத்யோகத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். உடலை பாதித்துக் கொண்டிருந்த நோய் நொடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் மதிப்பு அதிகரிக்கும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் எச்சரிக்கை இருப்பது அவசியம். உங்கள் முன்னேற்றத்திற்காக ஓய்வு உறக்கமின்றி உழைப்பீர்கள். அரசியல் வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை இக்காலத்தில் காண முடியும். புதிய இடம் வாங்கும் முயற்சி, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். நவீன பொருட்களின் சேர்க்கை ஒரு சிலருக்கு உண்டாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி லாபமாகும். வெளிநாட்டுக்கு சென்று வர நினைத்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ 9.
அதிர்ஷ்ட நாள்: அக் 21, 23, 30. நவ 3, 5, 12, 14.
பரிகாரம்: நவக்கிரக குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.