சபரிமலையில் ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகம் பக்தர்களுக்கு வசதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2024 10:12
சபரிமலை; சபரிமலையில் ஐயப்பனுக்கு அஷ்டாபி ஷேகம் நடத்த பக்தர்களுக்கு தினமும் காலையில் 3 மணி நேரம் வசதி செய்யப்பட்டுள்ளது. பால், தேன், திருநீறு, இளநீர், களபம், பஞ்சாமிர்தம் என ஆறுவகை பொருட்களால் ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்காக தேவசம்போர்டு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. காலையில் உஷ பூஜை முடிந்து 8:00 முதல் 11:00 மணி வரை அஷ்டாபிஷேகம் நடத்த முடியும். சன்னிதானம் நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இந்த பணத்தை செலுத்தி ரசீதை பெற்று அதற்கான கவுண்டரில் கொடுத்து ஆறுவகை பொருட்களையும் வாங்கி ஸ்ரீ கோவிலின் பக்கத்தில் உள்ள கேட் வழியாக முன் வரிசைக்கு செல்ல முடியும். ஒரு வழிபாடுக்கு நான்கு பேர் முன் வரிசையில் நின்று தரிசனம் செய்யலாம். அபிஷேகம் செய்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். ஒரு நாள் அதிகபட்சமாக 60 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்.