பதிவு செய்த நாள்
12
டிச
2024
11:12
திருச்சி; திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, பக்தர்கள் வழங்கிய நன்கொடையை பெற்று உருவாக்கப்பட்ட கிரீடத்தை, நேற்று, பரத நாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் வழங்கினார். திருச்சி, சமயபுரம் கோவில், மகா பெரியவர் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த கணேசன் போன்றவர்களுக்கு கிரீடம் செய்து கொடுத்துள்ள திருச்சி கோபால்தாஸ் நிறுவனத்தினர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு கிரீடம் செய்வதற்கான ஆர்டரை பெற்றனர். அந்நிறுவனத்தினர், ஆறு தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு, 34 கேரட்டில் 619 வைரங்கள், கொலம்பியாவில் இருந்து வரவழைத்த 140 கலர் ஸ்டோன்களில் கடைசல் வேலை செய்தும், எமரால்டு இன்கிரீமிங் செய்து, கலை நயத்துடனும் அழகிய வேலைபாடுகளுடனும், 40 நாட்களில் கிரீடத்தை தயார் செய்துள்ளனர்.