பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
தனுசு; மூலம்.. வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். நெருக்கடிகளை நீக்குவார். வெளிநாட்டு தொடர்புகளை அதிகரிப்பார். நீண்ட நாட்களாக வேலைக்கு முயற்சித்தவர்களின் கனவை நனவாக்குவார். அனைத்திலும் கவனமாக இருப்பது அவசியம். உங்களுடைய வேலைகளை இக்காலத்தில் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். ஜன. 1 முதல் புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்களுடைய திறமை வெளிப்படும் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். புதிய நண்பர்கள் வழியே ஒரு சில அனுபவங்களையும் அடைய வேண்டியதாக இருக்கும். 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி விலகும். எடுக்கின்ற முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதித்திடக்கூடிய சக்தி உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். மாணவர்கள் பொழுது போக்கிற்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 17, 18.
அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 21, 25, 30. ஜன. 3, 7, 12.
பரிகாரம்: விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட சங்கடம் நீங்கும்.
பூராடம் ; எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்பட்டு வாழ்வில் வெற்றி அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் விருப்பம் பூர்த்தியாகும் மாதம். அதிர்ஷ்டக் காரகனும் உங்கள் நட்சத்திராதிபதியுமான சுக்ரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரம் விருத்தியாகும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். பணியாளர்கள் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வு கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார். நினைத்த வேலைகளை நடத்தி முடித்திடக்கூடிய வாய்ப்புகளை வழங்குவார். பத்தாமிடத்து கேது வெளிநாட்டு முயற்சிகளில் ஆதாயத்தை உண்டாக்குவார். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டவர்களின் கனவை நனவாக்குவார். உறவினர் ஆதரவு கூடும். ஜன. 1 முதல் புத்திக்காரகன் புதனால் உங்கள் திறமை வெளிப்படும். சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும், புகழும், கிடைக்கும். 4 ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 18, 19.
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 24, 30. ஜன. 3, 6, 12.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம்; லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிலும் வேகமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். முயற்சி ஸ்தான சனி பகவானும், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும், புத்திக்காரகன் புதனும் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்டிருந்த வேலை ஒவ்வொன்றாக நடைபெற ஆரம்பிக்கும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கையுடன் ஒரு சிலருக்கு புதிய சொத்தும் சேரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரம், பங்கு மார்க்கெட்டில் புதிய முதலீடு செய்வீர். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்னை, வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சிகளை மேற்கொள்வீர். உழைப்பாளர்கள் நிலை உயரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 19.
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 28, 30. ஜன. 1, 3, 10, 12.
பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் கூடும்.