பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
மகரம்; உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்.. தர்ம சிந்தனையாலும் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் மாதம். சூரியன் 12 ல் சஞ்சரிப்பதால் செலவு பல வகையிலும் அதிகரிக்கும். இதுவரையில் கிடைத்த வந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடத்தில் கவனமாகவும் சட்ட சிக்கல்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். புதபகவான் ஜன 1 முதல் நன்மையான பலன்களை வழங்கிட இருப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். கேட்டிருந்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். நண்பர் உறவினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சனி பகவான் சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வதும், வரவு செலவில் கவனமாக இருப்பதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நல்லது. இந்த மாதத்தில் லாபத்தை நோக்கி உழைப்பும் அதிகரிக்கும். அதன் காரணமாக உடல் சோர்வடையும் ஒரு சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவை. கவனமாக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு வழக்கத்தை விட இந்த மாதம் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 20.
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 19, 26, 28. ஜன. 1, 8, 10.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மை உண்டாகும்.
திருவோணம்; முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பதும், வரவிற்கேற்ற செலவை மேற்கொள்வதும் பாதுகாப்பை உண்டாக்கும். ராகு உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி வைப்பார். எதிர்பார்த்த உதவிகளை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்க வைப்பார். தைரியமும் துணிச்சலுமாக செயல்படத் தொடங்குவீர். எதிலும் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நல்லது. மாதம் முழுவதும் சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த அளவிற்கு வரவு வரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாலினரால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் ஏற்படும். சனி பகவானின் பார்வைகள் சுக ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் உண்டாவதால் உடல் நிலையில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தை இயக்கும்போதும், இயந்திரப்பணியில் ஈடுபடும்போதும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவும், தெய்வ அனுகூலமும் கூடும். மாணவர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 21.
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 20, 26, 29. ஜன. 2, 8, 11.
பரிகாரம்: கபாலீசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்; விவேகத்துடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். உங்களுக்கு லாபாதிபதியும், நட்சத்திர அதிபதியுமான செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் வக்ரம் அடைந்திருந்தாலும், மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வரும் ராகு எதிர்பார்த்த முன்னேற்றங்களை உண்டாக்குவார். தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி வைப்பார். லாபத்தை அதிகரிப்பார். உங்கள் திறமையை வெளிப்படுத்துவார். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செய்து வரும் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் அதிகரிக்கும். சிறு வியாபாரிகள் சங்கடம் நீங்கும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ஞான மோட்சக் காரகனால் ஆன்மிகப் பயணம் செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றி விட்டு வருவீர். சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு வரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். உத்யோகத்தில் இருந்த பிரச்னை விலகும். பிறர் மதித்திடக் கூடிய அளவிற்கு உங்களுடைய நிலை மாறும். உழைப்பாளர்கள் நிலை உயரும். உடல்நிலையில் எப்போதும் கூடுதல் கவனம் தேவை. புத பகவானின் சஞ்சாரத்தால் புதிய சொத்து சேர்க்கை, எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: டிச. 22.
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன் 8, 9.
பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.