பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
விருச்சிகம்; விசாகம் 4 ம் பாதம்.. செயல் திறன் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நினைப்பதை நடக்கும் மாதம். குரு, செவ்வாய், கேது பகவான் மூலம் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். வரவுகளை அதிகரிப்பார். வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடிகளை நீக்கி வைப்பார். நியாயமான செயல்களில் லாபத்தை உண்டாக்குவார். வெளிநாட்டு முயற்சிகளில் லாபத்தை ஏற்படுத்துவார். பெரியோரால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்துடன் கோயில்களில் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றி வருவீர்கள். பிள்ளைகள் பற்றி மனதில் ஒரு கவலை ஓடிக்கொண்டிருக்கும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பீர்கள். எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் வெளியில் வரமுடியும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்ப்புகளையும் போட்டிகளையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். பொன் பொருள் சேரும். இந்த நேரத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும், வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பதும் நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.
சந்திராஷ்டமம்: ஜன. 11.
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 21, 27, 30. ஜன. 3, 9, 12.
பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
அனுசம்; நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. வழக்கமான வேலைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி வருவது நல்லது. உடல் ரீதியாக சில சங்கடம் தோன்றினாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் தடையின்றி வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களால் லாபம் உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். புத பகவான் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் முயற்சிகளை லாபமாக்குவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை நீக்கி வைப்பார். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்தவர்கள் கனவை நனவாக்குவார். புதிய தொழில் தொடங்குவதற்காக திட்டங்கள் தீட்ட வைப்பார். எத்தனை சங்கடம் வந்தாலும் அவற்றிலிருந்து இக்காலத்தில் உங்களால் விடுபட முடியும். மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருப்பதால் படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: டிச. 16. ஜன. 12.
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன. 8, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.
கேட்டை; விவேகத்துடன் செயல்பட்டு எந்த ஒன்றிலும் வெற்றி கண்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கேட்டிருந்த இடத்திலிருந்து கடன், தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுவிப்பார். எதிர்பார்த்த வரவு இருக்கும். சிறு வியாபாரத்திலும் லாபம் கூடும். உழைப்பாளர் நிலை உயரும். சுக்ரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர்கள் வழியில் லாபம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். நிதி நிறுவனம் நடத்தி வருபவர்கள் நிலை உயரும். வசூலாகாமல் இருந்த பணம் வரும். வெளிநாட்டு முயற்சிகள், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் லாபம் தரும். அதே நேரத்தில், உழைப்பும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வேலை பளு கூடும். பணியின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் இக்காலத்தில் நிதானமாக செயல்படுவதும், பிறரை அனுசரித்துச் செல்வதும் நல்லது. மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 17. ஜன. 13.
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9.
பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடம் விலகும்.