பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
கும்பம்; அவிட்டம் 3, 4 ம் பாதம்.. உறுதியும் செயலில் வேகமும் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும். தடைபட்ட வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முதலீட்டில் லாபம் உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி அடையும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனிபகவான் நிலையை உயர்த்துவார், தைரியமாக செயல்பட வைப்பார். நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் அனுசரித்து செல்வது நல்லது. செய்து வரும் தொழிலில் வழக்கத்தை விட கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பிறரை நம்பி எந்த ஒரு வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். அதனால் எதிர்மறையான பலன்களே ஏற்படும். எதிலும் உங்களுடைய நேரடிப் பார்வையும், செயல்பாடும் அவசியம். அதிர்ஷ்டக் காரகன் சுக்ரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலை நடக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 23.
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன. 8, 9.
பரிகாரம்: பைரவரை வழிபட நன்மை உண்டாகும்.
சதயம்; பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். ராகு பகவான் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் வரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் உங்கள் வார்த்தைகளில் கவனம் அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. சூரியன் சந்திப்பதால் அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இந்த மாதத்தில் வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியாளர் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். புத பகவான் அருளால் இடம் வாங்குவது விற்பது போன்ற வேலைகள் எளிதாகும். வியாபாரிகள் சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமான நிலை ஏற்படும். சுக்ர பகவானும் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும், பொன் பொருள் சேர்க்கையும் ஏற்படும். சப்தம ஸ்தானத்தை ஜென்ம சனி பார்ப்பதால் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், அவரின் உடல் நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வதும், நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதும் உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுரை பயன் தரும். வழக்கத்தை விட படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 23.
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 22, 26, 31. ஜன. 4, 8, 13.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்; எந்த ஒன்றிலும் உறுதியுடன் செயல்பட்டு லாபம் அடைவதுடன், பிறர் நலனிலும் அக்கறை கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்துள்ள நிலையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனைத்திலும் பின் விளைவு பற்றி யோசித்து முடிவிற்கு வருவது நல்லது. சூரியனும், புத பகவானும், சுக்ரனும் யோகப் பலன்களை வழங்கிட இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு முன்னேற்றமான மாதமாக இருக்கும். இதுவரையில் தடைபட்டிருந்த வேலை ஒவ்வொன்றாக இப்போது நடைபெற ஆரம்பிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். எல்லா வகையிலும் நன்மைகளை காணக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உழைப்பாளர்கள் நிலை முன்னேற்றமடையும். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகி இணக்கமான நிலை ஏற்படும். சனி பகவானின் பார்வை உண்டாவதால் வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் அக்கறை செலுத்தி வருவது இக்காலத்தில் மிகவும் அவசியம். கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள் விட்டுக் கொடுத்து செயல்படுவதன் வழியாக லாபம் காண முடியும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 24.
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 21, 26, 30. ஜன. 3, 8, 12.
பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.