பதிவு செய்த நாள்
31
டிச
2024
12:12
புனர்பூசம்; வெற்றி நிச்சயம்
குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும். சங்கடம் விலகும். விருப்பம் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணம் செல்வீர்கள்.
சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் பாக்யாதிபதியாக, நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். பட்டம், பதவி, செல்வாக்கு என முன்னேற்றப்பாதைக்கு வழிகாட்டுவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். பணப்புழக்கம் அதிகரிப்பார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டமாதிபதியாக, நெருக்கடிக்கு ஆளாக்குவார். உழைப்பிற்கேற்ற பலன்களை வழங்குவார். ஏதேனும் ஒரு வகையில் மன சங்கடத்தை ஏற்படுத்துவார்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 க்குப் பிறகும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே. 25 வரையிலும் கேது முன்னேற்றத்தை வழங்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உழைப்பிற்கேற்ற லாபத்தை அளிப்பார். எதிர்பார்ப்புகளில் ஆதாயத்தையும், ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். தன்னம்பிக்கை, தைரியம் கூடும்.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர், அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே10 வரை விரய குருவாக செலவுகளை அதிகரித்தாலும் விருப்பங்களை நிறைவேற்றுவார். எதிர்ப்பில் இருந்து பாதுகாப்பார். வழக்கில் வெற்றியளிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார்.
மே 11 முதல் ஜென்ம குருவாக சஞ்சரித்தாலும், திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார். 4 ம் பாதத்தினருக்கு மே 10 வரை லாப குருவாக வசதி வாய்ப்பை அதிகரிப்பார். சங்கடம் மறையும். திருமண யோகம், குழந்தை பாக்கியம், சமூக அந்தஸ்தை உண்டாக்குவார். மே 11 முதல் விரய குருவாக செலவை அதிகரித்தாலும், உடல்நிலையில் முன்னேற்றம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, சொத்து சேர்க்கை, வழக்கில் வெற்றி என உங்கள் நிலையை உயர்த்துவார்.
சூரிய சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 - மே 14, காலத்திலும், ஆக. 17 - செப். 16, நவ. 17 - டிச 15 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஜன.1 - 13, ஏப்.14 - ஜூன் 14 காலத்திலும், செப். 17 - அக். 17, டிச. 16 - 31 காலங்களிலும், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன், உங்கள் நிலையில் வெளிச்சத்தை உண்டாக்குவார். மனக்குறைகளை நீக்குவார். முயற்சியை வெற்றியாக்குவார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.
பொதுப்பலன்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாய்ப்பு தேடிவரும். அரசு வழியில் ஆதாயம், முயற்சிகள் வழியே எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
தொழில்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், வர்த்தகம், ஹார்டுவேர், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம் தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு கூடுதல் லாபம் உண்டாகும்.
பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். உழைப்பாளர்களின் நிலை உயரும். மதிப்பும், ஊதியமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொன், பொருள் சேரும். கணவரின் அன்பு கூடும்.
கல்வி: படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
உடல்நிலை: உடல்நிலையில் இருந்த பாதிப்பு படிப்படியாக விலகும். நீண்டகால நோய்களும் இப்போது சரியாகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அளவிற்கு உங்கள் உடல்நிலை முன்னேற்றம் அடையும்.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த சங்கடம், போராட்ட நிலை நீங்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் மேற்படிப்பு கனவை நனவாக்குவீர்.
பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடம் தீரும். நன்மை அதிகரிக்கும்.
பூசம்; எச்சரிக்கை தேவை
சந்திரன், சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025ம் ஆண்டு திட்டமிட்டு செயல்பட வேண்டிய வருடமாக இருக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. உங்கள் வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் நினைத்ததை சாதிப்பீர்கள். செயல்களில் தன்னம்பிக்கை இருக்கும். பொருளாதார நிலை உயரும். நினைத்திருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். ஆலய வழிபாட்டால் மனம் தெளிவாகும்.
சனி சஞ்சாரம்:
உங்களுக்கு அஷ்டமாதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் வேண்டும். உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், தொழிலில் அக்கறை செலுத்துவதும் நன்மையாகும். பிப். 27 - மார்ச் 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய அஸ்தமன, வக்கிர காலங்களில் அஷ்டம சனியின் பாதிப்பு நீங்கும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு 9 ம் இடத்திலும், கேது 3ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளித்து வெற்றியடைவீர். தெய்வ அனுகூலம் உங்களைப் பாதுகாக்கும். முயற்சி வெற்றியாகும். நோய் பாதிப்பு நீங்கும். வம்பு வழக்குகளை வெற்றி கொள்வீர்கள். மே 26 முதல் ராகு 8ம் இடத்திலும், கேது 2ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் குடும்ப குழப்பம், வருமானத்தில் நெருக்கடி ஏற்படும். உங்கள் உடல்நிலையிலோ, செல்வாக்கிலோ பாதிப்பு ஏற்படும் என்பதால் நிதானம் அவசியம்.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை லாப ஸ்தானத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப்.11 முதல் வக்ர நிவர்த்தியாகி மீண்டும் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை உயர்த்துவார். வசதி வாய்ப்பை அதிகரிப்பார். திருமண யோகம், குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார்.
மே 11 முதல் மிதுன ராசிக்குள் விரய குருவாக சஞ்சரிப்பவர் செலவுகளை அதிகரித்தாலும் உங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வார். உடல் நிலையில் முன்னேற்றம், வழக்கில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அக். 8 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிப்பவர் திருமண வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீடு, வாகனத்துடன் தொழிலில் ஆதாயத்தையும் அதிகரிப்பார்.
சூரிய சஞ்சாரம்: ஜன. 1 - 13 வரையிலும், ஏப். 14 - ஜூன் 14 வரையிலும், செப். 17 - அக். 17, டிச. 16 - 31 வரையிலும் உங்கள் ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன், நெருக்கடிகள் இல்லாமல் செய்வார். நினைத்ததை நடத்தி வைப்பார். செயல்களில் வெற்றியை உண்டாக்குவார். தன்னம்பிக்கை, தைரியத்தை வழங்குவார். எதிர்ப்பு, போட்டி இல்லாமல் செய்வார். வழக்கு விவகாரத்தில் வெற்றியை உண்டாக்குவார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். அரசுவழியில் வெற்றியை வழங்குவார். நீங்கள் எதிர்பார்த்த உயர்வை தருவார்.
பொதுப்பலன்: குரு, கேது, சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரத்தால் உங்கள் வேலைகள் நடந்தேறும். சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றி பெறும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சொத்து சேரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
தொழில்: தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், மினரல் வாட்டர், பால் வியாபாரம், இன்டஸ்ட்ரீஸ், வர்த்தகம், ஹார்டுவேர், பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
பணியாளர்கள்: நெருக்கடி ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். சிலர் புதிய வேலைக்கு செல்வீர்கள். இடமாற்றம், புதிய பொறுப்பும் சிலருக்கு ஏற்படும். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களையும், நிர்வாகத்தையும் அனுசரித்துச் செல்வதால் அனுகூலமும் ஆதாயமும் ஏற்படும்.
பெண்கள்: குருவின் பார்வை, மே 26 வரை கேதுவின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை இருக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். வேலை தேடும் முயற்சியில் தடை ஏற்படும். நிறுவனத்தின் நிலையறிந்து முயற்சி செய்வது நல்லது. திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொன், பொருள் சேரும். கணவரின் அன்பு கூடும் என்றாலும், மாங்கல்ய ஸ்தானமான 8ம் இடத்தில் சனி சஞ்சரிப்பதுடன் மே 27 முதல் ராகுவும் இணைவதால் கணவரின் நலனில் அக்கறை கொள்வது அவசியம்.
கல்வி: பொழுதுபோக்கு, தவறான நட்பு, அலைபேசி ஆகியவற்றை மே மாதம் வரை தவிர்ப்பது நல்லது. படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம். ஆசிரியர்களின் வழிகாட்டுதலைக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
உடல்நிலை: மூச்சுத்திணறல், மூட்டுவலி, இடுப்பு வலி என ஏதாவது பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு விபத்தால் பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும் எச்சரிக்கை தேவை. மருத்துவர் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
குடும்பம்: குடும்பத்தின் முன்னேற்றத்தில் அக்கறை உண்டாகும். கடன் வாங்கி புதிய சொத்து வாங்குவீர். வீடு கட்டுவீர். தம்பதி ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து செயல்படுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை அதிகரிக்கும்.
ஆயில்யம்; நிதானம் அவசியம்
சந்திரன், புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, மனதில் தெளிவும் செயல்களில் நிதானமும் அவசியம். பிறக்கும் 2025ம் ஆண்டில் உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். அதே நேரத்தில் எந்த நிலையையும் சமாளிப்பீர்கள். சூழ்நிலையறிந்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களை உயர்த்தும். பொருளாதார நிலை உயரும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். பிறர் விமர்சனத்திற்கு அஞ்சாமல் உறுதியாக இருப்பீர்கள். தெய்வ சிந்தனை அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்: சனிபகவான் ஆயுள் ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம். உங்கள் செல்வாக்கை தடுக்கும் வகையில் மறைமுகமாக சிலர் செயல்படுவர் என்பதால் நேர்மை, ஒழுக்கத்தில் உறுதியாக இருப்பது அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், தொழிலில் அக்கறை கொள்வதும் நல்லது. பிப். 27 - மார்ச் 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய அஸ்தமன, வக்கிர காலங்களில் அஷ்டம சனியின் பாதிப்பு குறையும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது தைரிய, வீரிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் முயற்சி வெற்றி பெறும். இழந்த அந்தஸ்தை மீட்டெடுப்பீர். சுறுசுறுப்பாக செயல்பட்டு வம்பு வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். மே 26 முதல் ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வரவு செலவில் கவனமாக இருப்பதும், வார்த்தையில் நிதானம் காப்பதும் நல்லது. அஷ்டம ராகு கஷ்டத்தை கொடுப்பார் என்பதால் உடல்நலனில் அக்கறை அவசியம்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை லாப ஸ்தானத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் வக்ர நிவர்த்தியாவதால் மீண்டும் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வசதி வாய்ப்பு நிறையும். மண வாழ்க்கையும் குழந்தை பாக்கியமும் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
மே 11 முதல் மிதுன ராசிக்குள் விரய குருவாக சஞ்சரிப்பவர், செலவுகளை அதிகரிப்பார் என்றாலும், விருப்பத்தை பூர்த்தி செய்வார். வழக்கில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம், உடல்நிலையில் உற்சாகம் என கனவுகளை நனவாக்குவார். அக். 8 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். தலைநிமிர்ந்து வாழக்கூடிய அளவிற்கு வசதி வாய்ப்பை வழங்குவார். அவரவர் நிலைக்கேற்ப திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, புதிய வீடு, வாகனம், தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார்.
சூரிய சஞ்சாரம்: ஜன. 1 - 13, ஏப். 14 - ஜூன். 14 காலத்திலும், செப். 17 - அக். 17, டிச. 16 - 31 காலங்களிலும் உங்கள் ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார். துணிச்சல், தைரியத்தை அதிகரிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்கு விவகாரத்தில் வெற்றியை உண்டாக்குவார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.
பொதுப்பலன்: குரு, கேது, சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சஞ்சாரத்தால் உங்கள் நிலை உயரும். நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். சிலருக்கு சொத்து சேரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
தொழில்: நெருக்கடி நீங்கும். பிறரை நம்பி செயல்பட்டு வந்த நிலை மாறும். உங்கள் பார்வைக்குள் கொண்டு வருவீர். உங்கள் அணுகுமுறை முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வாடிக்கையாளர் அதிகரிப்பர், பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மினரல் வாட்டர், பால் பண்ணை, எக்ஸ்போர்ட், நிதிநிறுவனம், ரியல் எஸ்டேட், விவசாயம், இன்டஸ்ட்ரீஸ், வர்த்தகம், கம்ப்யூட்டர், பப்ளிகேஷன்ஸ், ஹார்டுவேர், பங்குச்சந்தை, டி.வி, யூ டியூப் தொழில்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்: அரசு, பொதுத்துறை ஊழியர்கள் வேலையில் கவனமாக இருப்பதும், மேலதிகாரிகளை அனுசரித்துச்செல்வதும் நல்லது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் முதலாளியின் மனமறிந்து வேலைகளை மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், புதிய பொறுப்பு உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதால் அனுகூலம் உண்டாகும்.
பெண்கள்: எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருக்கும். வாழ்க்கைத்துணையின் நிலையறிந்து அனுசரித்துச் செல்வீர்கள். சுயதொழில் செய்பவர்களின் நிலை உயரும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
கல்வி: படிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. விளையாட்டு, பொழுதுபோக்கு, தவறான நட்பு, அலைபேசி ஆகியவற்றை மே மாதம் வரை தவிர்ப்பது நன்மையாகும்.
உடல்நிலை: மருத்துவச்செலவு இருக்கும். நரம்புக்கோளாறு, இருதய பாதிப்பு, மூச்சுத்திணறல் என உடல்நிலையில் கோளாறு இருக்கும். சிலருக்கு விபத்து காரணமாக பாதிப்பும் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
குடும்பம்: சூழ்நிலை அறிந்து திட்டமிட்டு செயல்படுவதால் முன்னேற்றம் உண்டாகும். அதிக வட்டிக்கு பணம் வாங்கினால் நிம்மதி குறையும். குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். சிலருக்கு சொத்து சேரும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பொன், பொருள் சேரும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபட்டால் நெருக்கடி நீங்கி நன்மை உண்டாகும்.