ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா முகூர்த்தகால் நடுவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2025 11:01
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத பூக்குழி திருவிழா மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 29ல் பூக்குழி திருவிழா, மார்ச் 30ல் தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு முகூர்த்த காலுக்கு பூசாரி சுந்தர் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் கோயில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து முகூர்த்தகால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் செல்வமணி, செயல் அலுவலர் ஜோதிலட்சுமி, மண்டகப்படதாரர்கள் பங்கேற்றனர்.