திருக்கோஷ்டியூர் கோயிலில் மாசி தெப்ப உற்சவம்; சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2025 11:03
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமியா நாராயண பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் அருள் பாலித்தார்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் மாசி தெப்ப உத்ஸவம் பிரசித்தி பெற்றது. இதில் பெண்கள் வேண்டுதலுக்கு மகா லெட்சுமிக்கு தீப வழிபாடு செய்கின்றனர். இன்று முதல் தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. உற்சவத்தை முன்னிட்டு இன்று சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் அருள் பாலித்தார். கோயில் வளாகத்தில் வேண்டுதலுக்காக பெண்கள் தீபம் ஏற்றி பிரார்த்தித்தனர்.