பதிவு செய்த நாள்
13
மார்
2025
04:03
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செயல்திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திர நாதனான சூரியன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். புதிய முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணியில் முன்னேற்றம் ஏற்படும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் அறிமுகமும் ஆதரவும் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அன்னியரால் லாபம் கூடும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். இதுவரை இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும் திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை கூடும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 21, 22.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 19, 24, 28. ஏப். 1, 6, 10.
பரிகாரம்: சூரியனை வழிபட வெற்றி உண்டாகும்.
ரோகிணி: எதிலும் அமைதியைக் கையாண்டு வெற்றி அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். உயர்கல்விக்காக திட்டமிட்டு படித்து வரும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் உண்டான நெருக்கடி விலகும். நினைத்த இடத்தை வாங்கும் நிலை உண்டாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். அரசு வழி வேலை சாதகமாகும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். ஜீவன ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் வேலையில் இருப்பவர்கள் நியாயம், நேர்மை என்ற வரையறைக்குள் இருப்பது நல்லது. தேவையற்ற சங்கடம் உண்டாகும். பணியில் தவறு செய்பவர்களுக்கு இக்காலம் சோதனைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 22, 23.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 20, 24, 29. ஏப். 2, 6, 11.
பரிகாரம்: கயிலாச நாதரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: சிந்தனையில் தெளிவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நினைத்ததை நடத்திக் கொள்ளும் மாதம். உங்கள் நட்சத்திரநாதன் ஏப். 7 வரை இரண்டாம் இடத்தில் கவனம் தேவை. உங்கள் வேலையில் எதிர்ப்பு, பிரச்னை என உருவாகும். உடல் நிலையிலும் ஒருநேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். மாதத்தின் பிற்பகுதியில் சகாய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நிலைமை சீராகும். யோகக் காரகன் ராகு, ஆத்மக் காரகன் சூரியனால் எடுத்த வேலைகளை முடிக்கக் கூடிய நிலை உண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை முடியும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் குரு பகவான் உங்கள் உயர்த்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். எத்தகைய பிரச்னை வந்தாலும் அதிலிருந்து விடுபடக்கூடிய சூழலை உருவாக்குவார். தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் அடையும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு உயர் கல்விக்குரிய வாய்ப்பு இப்போதே அமையும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். மார்ச் 30 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் போராட்டமான நிலை மாறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைத்த வேலை நடந்தேறும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 23, 24.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 27. ஏப். 6, 9.
பரிகாரம்: முருகனை வழிபட நினைத்தது நிறைவேறும்.