பதிவு செய்த நாள்
13
மார்
2025
04:03
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம் அறிவின் துணை கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நிதானமான மாதம். ஏப். 7 வரை செவ்வாய் ராசிக்குள்ளும் அதன்பிறகு இரண்டாம் இடத்திலும் சஞ்சரிப்பதால் செயல்கள் அனைத்திலும் கவனம் தேவை. சில வேலைகளில் சங்கடங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உடல்நிலை பாதிக்கலாம். புதன் வக்கிரமாக இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. இடம் விற்பது வாங்குவது போன்ற விவகாரங்களில் கூடுதல் விழிப்புணர்வு தேவை. ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். சனியும், சூரியனும் உங்களை உயர்த்துவார்கள். அரசு வழி முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த மாற்றம், உயர்வு உண்டாகும். எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய நிலையினை 6, 8 ம் இடங்களுக்கு கிடைத்திடக்கூடிய குரு பகவானின் பார்வை உங்களுக்கு வழங்கும். வழக்குகளில் இருந்து விடுதலைக் கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களின் நிலை மாறும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடக்கும் சூழ்நிலை சாதகமாகும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் கூடுதலாக கவனம் தேவை. ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. குடும்பத்தில் சின்னச் சின்ன சங்கடம் வந்து செல்லும். தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் மிக அவசியம். வேலைத் தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 24.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, 27. ஏப். 5, 9.
பரிகாரம்: பெருமாளை வழிபட நன்மை நடக்கும்.
திருவாதிரை: எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு என சஞ்சரிப்பதால் வியாபாரம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் நினைத்த வேலை நடக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். சூரியனால் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கனவு நனவாகும். வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். ராகு பகவான் வருவாயை அதிகரிப்பார். உங்கள் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகளில் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். இடம் அறிந்து யோசித்து செயல்படுவது நல்லது. எதிலும் அவசர கதி என்பது இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்மறையான பலன்களை உண்டாக்கும். நிதானமாக செயல்படுவதும், பணியில் கவனமாக இருப்பதும், புதிய முயற்சிகளில் நன்மையை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். எல்லாவற்றையும் சமாளிக்ககூடிய சக்தியும் உங்களுக்கு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது. அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதும் நற்பலனை கொடுக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 24, 25.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 22, 23, 31. ஏப். 4, 5, 13.
பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட முயற்சி வெற்றியாகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்; நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் நான்கு, ஆறு, எட்டாம் இடங்களுக்கு உண்டாவதால் திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் லாபம் உண்டாகும். உழைப்பு அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலக ஆரம்பிக்கும். எதிர்ப்பு, பிரச்னை என்றிருந்த நிலை மாறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். வியாபாரம் லாபம் அடையும். பெரிய மனிதர்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தள்ளிப் போன வழக்கு முடிவிற்கு வரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சனி பகவானால் எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். சுக்கிரன் வக்கிரமாகி இருப்பதால் தம்பதிக்குள் அனுசரித்துச் செல்வது அவசியம். புதிய முயற்சிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் மாற்று சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம். சிறு வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் நன்றாக யோசிக்கவும். ஷேர் மார்க்கெட்டில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 25, 26.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 23, 30. ஏப். 3, 5, 12.
பரிகாரம்: வைத்தியநாத சுவாமியை வழிபட வளம் அதிகரிக்கும்.