பதிவு செய்த நாள்
13
மார்
2025
04:03
சிம்மம்: மகம்: நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். கோச்சார ரீதியாக குடும்ப ஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சூரியன், மற்றும் சுக்கிரன் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளால் நெருக்கடி உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் நட்புகளுக்குள் விரிசல், தம்பதிகளுக்குள் இடையேயான உறவில் நெருக்கடி ஏற்படும். குரு பகவானின் பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர்கள். தாய்வழி உறவுகளின் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு வெற்றியாகும். மாணவர்கள் இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. வயதானவர்கள் உடல்நலனில் எப்போதும் கவனமாக இருப்பது அவசியம். விவசாயிகளுக்கு லாபம் கூடும். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 28, 29.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 19, 25. ஏப். 1, 7, 10.
பரிகாரம்: விநாயகரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
பூரம்; எதிலும் முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் சூரியனும் உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரனும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வருவதால் எதிர்பார்த்த வேலைகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். அரசு வழியில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். குடும்பத்திலும் குழப்பம், நிம்மதியற்ற நிலை ஏற்படும். வீண் பிரச்னை உங்களைத் தேடிவரும், உடன் பணி புரிபவர்களும் விரோத மன நிலைக்கு செல்வார்கள் என்றாலும், ஏப். 7 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் நிலையை உயர்த்துவார். எத்தனைப் பிரச்னை வந்தாலும் அதில் இருந்து உங்களை விடுபட வைப்பார். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர்கள். சனிபகவான் சிறு சிறு சங்கடங்களை உண்டாக்கினாலும் நினைத்த வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். குரு பகவானின் பார்வைகளால் கையில் பணம் புரளும். சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது. உடல் நிலையில் சங்கடம் ஏற்பட்டாலும் அதிலிருந்து தேர்ச்சி அடைவீர்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நல்லது. தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும், விட்டுக்கொடுத்து செயல்படுவதும் நிம்மதிக்கு வழிவகுக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 29, 30.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 19, 24, 28. ஏப். 1, 6, 10.
பரிகாரம்: மாரியம்மனை வழிபட சங்கடம் விலகும்.
உத்திரம் 1 ம் பாதம்: நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதம். சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெறுவதால் எடுத்த வேலையை உடனடியாக முடிக்க முடியாமல் போகும். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக உழைத்திட வேண்டியதாக இருக்கும். எதிரிகளுடைய தொல்லைகளும் இந்த நேரத்தில் அதிகரிக்கும். உடல் நிலையும் ஒரு நேரத்தில் இருப்பதுபோல் மறு நேரத்தில் இல்லாமல் போகும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். சுக்கிரன் மாத முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் தம்பதிகளுக்குள் சிறு சிறு பிரச்னை உண்டாகும். நட்புகளால் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லக்கூடிய நிலை ஏற்படும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மாதம் முழுவதும் குரு பகவானின் பார்வைகளும், ஏப் 7 வரை செவ்வாயின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளக்கூடிய அளவிற்கு வாய்ப்பு உருவாகும். தேவைக்கேற்ற வரவு இருக்கும். அரசு பணியாளர்கள் மாதம் முழுவதும் தங்கள் பணியில் கவனமாக இருப்பதுடன் அதிகாரிகளின் உத்தரவின்படி செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் மந்தம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று அதன்படி செயல்படுவது நல்லது. விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலர் சொந்தமாக வீடு, நிலம் வாங்குவீர்கள்.
சந்திராஷ்டமம்: மார்ச் 30.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 28. ஏப். 1, 10.
பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட நினைப்பது நடந்தேறும்.