பதிவு செய்த நாள்
13
மார்
2025
04:03
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்; பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகளில் இருந்து விடுதலை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை கொஞ்சம் கொஞ்சமாக விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். சகோதரர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குழந்தைக்காக காத்திருந்தவருக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். நண்பருடன் ஏற்பட்ட பிரச்னை சுமூக முடிவிற்கு வரும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகி இணக்கம் உண்டாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செயல்படுவீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகும். வயதானவர்கள் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிறு சிறு சங்கடம் தோன்றி உடலில் பிரச்னைகளை உண்டாக்கும். செயல்களில் தாமதம் உண்டாகும். மருத்துவச் செலவு கூடும். உணவு உறக்கம் போன்றவற்றில் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 26.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 21, 29, 30. ஏப். 2, 3, 11, 12.
பரிகாரம்: மாரியம்மனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : தர்ம படி வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து நெருக்கடிகளை உண்டாக்கி வந்த சூரியன், பாக்கிய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலக ஆரம்பிக்கும். சனிபகவான் தொடர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் செயல்களில் கவனம் தேவை. தொழில் போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக சதி புரிவர். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். குரு பகவான் பார்வை உங்களுடைய நிலையை உயர்த்தும். நினைத்த வேலைகளை நடத்திக்கொள்ள முடியும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேதுவால் திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் முடிவு கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். மாணவர்களின் உயர்கல்வி நனவாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறக்கூடிய நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன்வரும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் உண்டு. மார்ச் 30 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட கடன் கைக்கு வரும். ஷேர் மார்க்கெட், சொத்து வாங்குவது விற்பது போன்ற வேலைகளில் லாபம் கிடைக்கும். களத்திரக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் வக்கிரமடைந்திருப்பதால் தம்பதிக்குள் விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது. உடல்நிலையில் அவ்வப்போது சங்கடம் தோன்ற வாய்ப்பிருப்பதால் பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 26, 27.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 20, 29. ஏப். 2, 8, 11.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்
ஆயில்யம்: உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். புதன் மார்ச் 30 முதல் வக்கிர நிவர்த்தியாகி யோகப் பலன்களை வழங்கிட இருக்கிறார். மறைந்த புதன் நிறைந்த செல்வங்களை வழங்குவார். நீண்டநாள் கனவு நனவாகும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். பெரியோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். நிதி நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவரின் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் உயர்வு ஏற்படும். விரும்பிய கல்லுாரி, விரும்பிய படிப்பு என்ற கனவு நனவாகும். ஜென்ம ராசிக்குள் செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் சனி என்ற நிலையால் உடல் நிலையில் கவனம் வேண்டும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அரசு பணியில் இருப்பவர்கள் வீண் பிரச்னைகளுக்கு இடம் அளிக்க வேண்டாம். அதனால் நெருக்கடி உண்டாகும். இட மாற்றத்தை ஒரு சிலர் சந்திக்க நேரும். கவனமாக செயல்படுவது அவசியம். குரு பகவானின் பார்வை, கேதுவின் சஞ்சாரமும் முன்னேற்றப் பாதையில் உங்களை அழைத்துச்செல்லும். நெருக்கடி தோன்றினாலும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவீர்கள். நண்பர்கள், வாழ்க்கைத் துணையால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறுவதற்குரிய சூழல் அமையும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிள்ளைகளுடைய நிலையில் முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு உயரும் மாதம். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 27, 28.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 23, 29, ஏப். 2, 5, 11.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை நடக்கும்.