பதிவு செய்த நாள்
13
மார்
2025
04:03
கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்; திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரி தங்கள் தொழிலை விரிவு செய்வதற்காக வெளியூர் செல்வீர்கள். குரு பகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் இதுவரை ஞான மோட்சக்காரகன் கேதுவால் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி விலக ஆரம்பிக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். சகோதரர்கள் வகையில் உதவியும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சுப செயல்கள் நடக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரி, விரும்பிய கல்வி என்ற நிலை உருவாகும். மார்ச் 30 முதல் ராசி நாதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். இடம் வாங்குவது விற்பது போன்ற விவகாரங்களில் லாபம் உண்டாகும். ஷேர்மார்க்கெட் ஆதாயம் தரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 30, 31.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 23, 28. ஏப். 1, 5, 10.
பரிகாரம்: அகோர மூர்த்தியை வழிபட பயம் விலகும்.
அஸ்தம்: எதிலும் நினைத்த இலக்கை அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். சத்துரு ஜெய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவானால் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழிலில் ஏற்பட்ட போட்டி சரியாகும். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய நிலை உருவாகும். குருவால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி அடைவீர்கள். ராகு, சூரியன், குரு ஆகியோர் உங்கள் ராசியைப் பார்ப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலையை உடனே முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாகும். கௌரவம், அந்தஸ்து, செல்வாக்கு உயரும். ஏப். 7 முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், விவசாயம் லாபம் தரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். வயதானவர்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய பொறுப்பு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 31, ஏப். 1.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 23, 29. ஏப். 2, 5, 11.
பரிகாரம் வடிவுடை அம்மனை வழிபட வளம் உண்டாகும்.
சித்திரை 1, 2 ம் பாதம்
எதிலும். வேகம் விவேகத்துடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி கண்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். மாதத்தொடக்கத்தில் செவ்வாய் பகவான் உங்கள் வேலைகளை நீங்கள் நினைத்தபடி நடத்தித் தருவார். பிறரால் முடியாதென கைவிடப்பட்ட வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையும். ஏப். 7 ம் தேதி முதல் செவ்வாய் முதலீடுகளை இரட்டிப்பாக்குவார். மார்ச் 30 முதல் புதன் பகவானாலும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். மாதம் முழுவதும் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் உங்கள் நிலையை உயர்த்துவார்கள். இதுவரையில் உங்கள் வாழ்க்கையில், தொழிலில், முன்னேற்றத்தில் இருந்த பிரச்னை நெருக்கடி போராட்டம் விலக ஆரம்பிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். களத்திரக்காரகன் சுக்கிரன் வக்கிரமடைந்திருப்பதால் எதிர்பாலினரால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மேற்கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். வயதானவர்கள் இக்காலத்தில் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப். 1.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, 27. ஏப். 5, 9.
பரிகாரம்: கபாலீஸ்வரரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.