பதிவு செய்த நாள்
13
மார்
2025
05:03
துலாம்; சித்திரை 3, 4 ம் பாதம்; துணிச்சலுடன் பிறந்த உங்களுக்கு, இந்த பங்குனி மாதம் மிக யோகமான மாதம். உங்கள் செவ்வாய் மாதத்தின் தொடக்கத்தில் ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் செயலில் கவனமாக செயல்பட வேண்டும். வாய்ப்பு தேடி வந்தாலும் அதில் உள்ள நன்மைத் தீமைகளை ஆராய்வீர்கள். குரு சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் போட்டியாளர்கள் மீது எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுகத் தொல்லை உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஒரு சிலர் ஆளாவீர்கள். வண்டி வாகன விஷயங்களில் செலவு ஏற்படும். ராகுவும் சூரியனும் எடுத்த வேலைகளை முடிக்க கூடிய ஆற்றலை தருவார்கள். அதற்கேற்ப சூழ்நிலைகளும் அமையும். பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும். உடல் மனத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். துணிச்சலாக செயல்படுவீர்கள். குரு பகவானின் பார்வைகளால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப காரியம் நடந்தேறும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி ஆட்சியாக சஞ்சரிப்பதால் பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதனின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. ஆசிரியர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்பதும் வேறு சிந்தனைகளுக்கு இக்காலத்தில் இடம் கொடுக்காமல் இருப்பதும் நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப். 1, 2.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.
பரிகாரம்: பண்ணாரி அம்மனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி; அதிர்ஷ்டமும் யோகமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். சத்துரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு நீங்கள் எடுக்கும் வேலைகளில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். தொழிலில் ஏற்பட்ட போட்டி முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணியில் இருப்பவர்களுக்கு உண்டான பிரச்னை முடிவடையும். இதுநாள் வரை உங்களை விமர்சனம் செய்தவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்கள் லாபாதிபதி சூரியனும் சாதகமாக சஞ்சரிப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். அரசு வழி முயற்சி லாபம் தரும். இதுவரை எதிர்பார்த்தும் கிடைக்காத அனுமதி கிடைக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் முடிவிற்கு வரும். களத்திரக்காரகனால் தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வருமானம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். பூர்வீக சொத்துகளில் சிறு பிரச்னை தோன்றினாலும் அதை சரி செய்வீர்.
சந்திராஷ்டமம்: ஏப். 2.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 22, 24. 31. ஏப். 4, 6, 13.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நெருக்கடி நீங்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்; நினைத்த வாழ்வை வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ராசிநாதனுடன் பரிவர்த்தனை அடைவதால் நினைத்த வேலை நடக்கும். எதிர்ப்பு விலகும். மனதில் நம்பிக்கை உண்டாகும். குரு பகவானின் பார்வை 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் இக்காலத்தில் புதிய வாகனம் வாங்குவது, வீடு வாங்குவது என்ற முயற்சிகள் வெற்றியாகும். அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். அதற்கேற்ற வகையில் வரவும் இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி முன்னேற்றம் உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உண்டாகும். எத்தனைப் பிரச்னை வந்தாலும் அதை தைரியமாக சமாளிப்பீர். சந்தோஷத்துடன் வாழ்வீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிகள் இருவரும் விட்டுக்கொடுத்து செயல்படுவீர். ஒரு சிலர் புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சனி பகவான் ஐந்தாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதும், உறவுகளிடம் விட்டுக் கொடுத்துப் போவதும் நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கவனச்சிதறல் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பதும் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப். 3.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 24, 30. ஏப். 6, 12.
பரிகாரம்: வாஞ்சிநாதரை வழிபட நினைப்பது நடந்தேறும்.