பொதட்டூர்பேட்டை; பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் பகல் 2:00 மணிக்கு மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தப்படுகிறது. கடந்த 13ம் தேதி பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன், தெருக்கூத்து நாடகம் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திரவுபதியம்மன், தர்மராஜா திருக்கல்யாணம், நேற்று நடந்தது. வெள்ளிக்கிழமையான இன்று பகல் 12:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கவுரவர்களுக்கு எதிரான குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற பாசுபத அஸ்திரம் வேண்டி, அரச்சுனன் தபசு மேற்கொண்ட நிகழ்வு இன்று தெருக்கூத்து கலைஞர்களால் நடத்தப்பட்டது. இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை 10:00 மணிக்கு துரியோதனன் படுகளமும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது.